Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Thursday, December 13, 2012

விளையாட்டு விழா 2012

விளையாட்டு விழா
 
      எம்பள்ளியின் விளையாட்டு விழா கடந்த 07.12.2012 வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பள்ளி மாணவர் அல்ஹாபிழ் முபிஸ் ரஹ்மான் கிராஅத் ஒத விழா துவங்கியது. பள்ளி தலைமையாசிரியர் ஜனாப் எம்.ஏ. முகம்மது ஹனிபா M.Sc., M.Ed., அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஆட்சிக்குழு தலைவர் ஜனாப் டாக்டர் எம்.எஸ். அஷ்ரஃப் M.D., F.I.C.A., விழாவிற்கு தலைமை ஏற்று, தலைமை உரையாற்றினார். பள்ளி ஆட்சிக்குழுவின் உதவி செயலாளர் ஜனாப் ஹாஜி எஸ்.எம். சதக்கத்துல்லா, உதவித் தலைவர் ஜனாப் ஹாஜி எஸ்.எம். உஜைர், ஜனாப் ஹாஜி எல்.கே. லெப்பைத் தம்பி மற்றும் முன்னால் ஆசிரியர் ஜனாப் ஹாஜி ஏ.எஸ். அஷ்ரப் அலி, ஹாஜி லுக்மான் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் ஜனாப் டாக்டர் எஸ்.எல் முகம்மது லெப்பை MBBS, D.V., வாழ்த்துரை வழங்கினார்.

    விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர், மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு. கே. விவேகானந்தன் B.A., B.L., அவர்கள் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி விழா பேருரை நிகழ்த்தினார். பரிசு வழங்கல் நிகழ்ச்சிகளை பள்ளியின் ஆசிரியர் அஹமது ஏ.ஜே. முஸ்தபா M.A., B.Ed., மற்றும் முன்னால் வணிகவியல் ஆசிரியர் ஜனாப். எம்.ஏ. புஹாரி M.Com., M.Phil., M.Ed., தொகுத்து வழங்கினார். மாணவர்களின் தாயிரா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இறுதியில் பள்ளியின் உதவி தலைமையாசிரியர் திரு. எம். டேவிட் செல்லப்பா M.Sc., M.Ed., நன்றி நவிழ, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment