Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Thursday, January 31, 2013

மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு இறைவழிபாட்டு கூட்டத்தில் பாராட்டு..


மாநில அளவிலான குடியரசுதின கால்பந்து போட்டியில் எம்பள்ளி அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. இம்மாணவர்களை கவுரவப்படுத்தும் நிகழ்வாக  (28/01/2013) அன்று காலை பள்ளி சுலைமான் அரங்கில் நடைபெற்ற இறைவழிப்பாடுக் கூட்டத்தின் போது அம்மாணவர்களுக்கு பதக்கங்களும், ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பள்ளி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். பள்ளி மாணவர்களின் கிராஅத், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா வாழ்த்துரை வழங்கினார். அவரது உரை விபரம் வருமாறு:-  


பள்ளியில் நான் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் இந்த 18 ஆண்டுகளில், மிகவும் மகிழத்தக்க பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன... அதுபோல, வருந்தத்தக்க சில நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

மகிழத்தக்க நிகழ்வுகளில், கடந்த சில ஆண்டுகளாக எம் பள்ளியின் கால்பந்து வீரர்கள் ஏராளமான வெற்றிகளைக் குவித்து சாதனைகள் புரிந்தவண்ணம் உள்ளனர். இதற்காக, சளைக்காமல் ஊக்கமளித்து வரும் எம் பள்ளியின் கண்ணியத்திற்குரிய நிர்வாகிகள், அயராது பாடுபட்டு வரும் எம் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், எம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் - குறிப்பாக, இம்மாணவர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வரும் முன்னாள் மாணவர் சதக் இப்றாஹீம் ஆகியோரையும், ஆட்டக்களங்களில் அருமையாக விளையாடி, பல வெற்றிகளைக் குவித்து வரும் எனதன்பிற்குரிய மாணவர்களையும் நான் மனமகிழ்வுடன் பாராட்டுகிறேன்...

இச்சாதனையைப் பாராட்டி, எம் பள்ளியின் தலைவர், தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் விரைவில் சிறப்பு நிகழ்ச்சியொன்றை நடத்தி, சாதனை அணிக்கு சிறப்பு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

நான் பணி ஓய்வு பெறப்போகும் இந்த இறுதியாண்டில், எம் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்றதைப் போல, நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளிலும் மாநில அளவில் முதலிடம் பெற்றால், அதை விட எனக்கு வேறு மகிழ்ச்சி இருக்கப்போவதில்லை. அந்த வாய்ப்பை வல்ல இறைவன் எம் பள்ளிக்கு வழங்க வேண்டும் என இந்நேரத்தில் நான் மனதார பிரார்த்திக்கிறேன்...

பள்ளி வரலாற்றிலேயே முதன்முறையாக, கால்பந்துப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று எம் பள்ளி சாதனை புரிந்துள்ளதை எண்ணுகையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... இதற்காக அணி வீரர்களுக்கு பணப்பரிசு, பதக்கம், சான்றிதழ்களெல்லாம் வழங்கப்பட்டுள்ளது... இப்பரிசுகள் அனைத்தும் மாணவர்களுடனேயே சென்று விடும்.

அதே வேளையில், இவ்வளவு பெரிய சாதனைக்காக, பள்ளிக்கு ஒரு கோப்பையையோ, கேடயத்தையோ வழங்கியிருந்தால், அது ஆண்டாண்டு காலத்திற்கும் பள்ளியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அதாவது, ஒரு பெரிய சரித்திரம் பாதுகாக்கப்படும். அந்த வாய்ப்பு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியதே!

இவ்வாறு பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து, மாநில அளவில் கால்பந்து அணியினர் சாதனை படைத்த விபரங்களை,  உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் மாணவர்களுக்கு விளக்கிப் பேசினார். 


 இந்த நிகழ்ச்சியில் ஜனாப்.S.M.M.சதக்கதுல்லாஹ், ஜனாப்.S.A.முஸ்தஃபா மற்றும் ஜனாப்.L.T.இப்றாஹீம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். பள்ளியின் ஜூனியர் பிரிவு கால்பந்து வீரர்கள் சார்பாக அவ்வணியின் பயிற்சியாளர் சகோ.சதக்கதுல்லாஹ் சீனியர் மாணவர்களுக்கு நினைவு கோப்பையை வழங்கினார்.

 நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. 


 இந்த நிகழ்வின் வீடியோ பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்

Sunday, January 27, 2013

மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டி : எம்பள்ளி முதலிடம்
17 வயதுக்குட்பட்டோருக்கான (சீனியர் பிரிவு) வட்டார அளவிலான கால்பந்தாட்ட போட்டிகள் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் எல்.கே.மேல்நிலைப்பள்ளி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியை வீழ்த்தி மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியினர் 2–1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி புனித லசால் மேனிலைப்பள்ளியை வென்று மண்டல (டிவிஷனல்) அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது

கோவில்பட்டியில் அக்டோபர் மாதம் நடைபெற்ற மண்டல அளவிலான இறுதிப்போட்டியில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணியினர், பாளையங்கோட்டை புனித சேவியர் மேல்நிலைப்பள்ளி அணியினருடன் விளையாடினர். இதில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

64வது இந்திய குடியரசு தின விழாவையோற்றி மாநில அளவிலான (சீனியர் பிரிவு) கால்பந்தட்டப் போட்டிகள் தஞ்சாவூரில் வைத்து நடைபெற்றது.

இதன் இறுதிப்போட்டி நேற்று 26.01.2013 மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இப்போட்டியில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி மற்றும் திண்டுக்கல் புனித மேரீஸ் மேல்நிலைப்பள்ளி அணியினரும் கலம் இறங்கினர். ஆட்ட நேர முடிவில் இரு அணியினரும் தலா ஒரு கோல் போட்டு இருந்தனர். இதனால் டைப்பிரேக்கர் மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.

இதில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணியினர் 4-2 என்ற கோல் விகிதத்தில் வெற்றிப்பெற்று குடியரசு தின வெற்றிக் கோப்பையை தட்டி சென்றது.

கடந்த ஆண்டு நடைபெற்ற இதே குடியரசு தினப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
  
வெற்றி பெற்ற அணியினரை பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

64வது குடியரசு தின விழா

64வது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் 26.01.2013 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

பள்ளி மாணவர் ஹாஃபிழ்  முபீஸ் ரஹ்மான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சிக்கு தலைமையும் வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஜி எஸ்.எம்.எம். சதக்கத்துல்லாஹ், எல்.டி.இப்றாஹீம் மற்றும் ஏ.ஆர். தாஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


 பின்னர், பள்ளியின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்தினார். அதனையடுத்து, விழாவில் கலந்துகொண்ட அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

அதனை அடுத்து தேசிய கொடி வாழ்த்துப்பாடல், தேச பற்றுப் பாடல் போன்றவைகள் பள்ளியின் பாடல் குழுவினரால் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம், வாழ்த்துரை வழங்க, பள்ளி ஆசிரியர் சித்தீக் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே முடிவுற்றது.
பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் அலுவலர்கள் கலந்து சிறப்பித்தனர். 
நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர்  ஜுபைர் அலீ நெறிப்படுத்தினார்.  

Saturday, January 26, 2013

SENIOR FOOTBALL TEAM QUALIFY FOR STATE LEVEL FINALSTATE LEVEL SENIOR FOOTBALL

VENUE : THANJAVOOR
LKHSS SENIOR FOOTBALL TEAM

QUALIFY FOR FINAL
match details:
date : 24.01.2013 (4.30 pm)

Lkhss, kayalpatnam  -1  

(SCORER : AZHAR)
Little flower, salem - 1

Tie-breaker: 
lkhss 2-1 salem

QUARTER FINAL:
date : 25.01.2013 (3.00pm)

Lkhss, kayalpatnam  -2

(SCORER  : AZHAR, HADHI)
RAJENDRAN MATRIC HSS, ERODE  - 0

SEMI FINAL:
date: 26.01.2013 (8.00am)

LKHSS, KAYALPATNAM   - 5

(SCORER – AZHAR, NOOHU, FARIS, FAYAZ -2)
ARINGAR ANNA HSS, KANCHIPURAM  - 0

FINAL
date: 26.01.2013 (4.30pm) 

LKHSS, KAYALPATNAM  

VS

ST. MARY’S HSS, DINDUGAL

3rd PLACE MATCH :
date : 26.01.2013 (3.00 pm)
Arignar anna hss, kanchipuram 
 vs
kaja miyan, trichy

Friday, January 25, 2013

ஆண்டு விழா நிகழ்வுகள்


எம்பள்ளியின் ஆண்டுவிழா 23.01.2013 புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவிற்கு அப்பள்ளியின் தலைவர் ஜனாப்.Dr.M.S.அஷ்ரஃப் M.D., தலைமை தாங்கினார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் தாளாளருமான ஜனாப்.Dr.M.M.சாகுல் ஹமீது M.Sc., Ph.D., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

நிகழ்வின் துவக்கமாக பள்ளி மாணவரும், ஹாஃபிழுமான முஃபிஸ் ரஹ்மான் இறைமறை வசனத்தை ஓதினார். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது, பின்னர் பள்ளியின் தாளாளர் ஜனாப்.Dr. S.L.முஹம்மது லெப்பை MBBS., D.V., வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜனாப்.M.A.முஹம்மது ஹனீஃபா M.Sc., M.Ed., பள்ளியின் ஆண்டரிக்கையை வாசித்தார். பிறகு பள்ளியின் தலைவர் ஜனாப்.Dr.M.S.அஷ்ரஃப் M.D., தலைமை உரை நிகழ்த்தினார்கள். அவர்களை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் ஜனாப்.Dr.M.M.சாகுல் ஹமீது M.Sc., Ph.D., சிறப்புரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு, மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் முதல் இடத்தினை பெற்ற மாணவருக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இரண்டாம் இடத்தை பெற்ற மாணவர்களுக்கும், ஒவ்வொரு பாடப்பிரிவில் முதல் மதிப்பெண்னை பெற்ற மாணவர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

பின்னர் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் 11-ம் வகுப்பில் முதல் இடத்தை பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 


இறுதியாக பள்ளியின் உயிரியல் பாட முதுகலை ஆசிரியர்                           ஜனாப். M.A.F.செய்யது அஹமது நன்றியுரையாற்றினார்கள்.

நிகழ்வுகளை ஆசிரியர் ஜனாப். அஹமது ஏ.ஜே. முஸ்தஃபா தொகுத்து வழங்கினார்.

மேலும் புகைப்படங்கள் விரைவில்...

Wednesday, January 23, 2013

பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம்

எம்பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் 22.01.2013 செவ்வாய்க்கிழமையன்று மாலை நடைபெற்றது. 

 நடப்பாண்டில் அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள - இப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்குபெறும் “கலந்துரையாடல்” நிகழ்ச்சியாக இக்கூட்டம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. 

 பள்ளி தாளாளரும், பெற்றோர் - ஆசிரியர் கழக பொருளாளருமான டாக்டர் முஹம்மத் லெப்பை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா முன்னிலை வகித்தார்.  

தலைமையுரையைத் தொடர்ந்து, அரசு பொதுத்தேர்வையொட்டி மாணவர் - பெற்றோருக்கான ஆலோசனைகளை உள்ளடக்கி பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம் சிற்றுரையாற்றினார்.பின்னர், பெற்றோர் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.  
 பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா - பெற்றோரின் கேள்விகளுக்கு விளக்கமளித்து உரையாற்றினார். 

தலைமையாசிரியர் உரையைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில், பள்ளியின் 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Monday, January 21, 2013

பெற்றோர், ஆசிரியர் கழகக்கூட்ட அழைப்பிதழ்

        நாளை (22.01.2013, செவ்வாய்கிழமை) மாலை 4.30 மணியளவில், 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்குபெறும் 'கலந்துரையாடல்' (பெற்றோர் ஆசிரியர் கழகக்கூட்டம்) நிகழ்வு எம்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே மேற்படி வகுப்பில் பயிலும் மாணவர்களது பெற்றோர்கள் இக்கூட்டத்தில் கலந்து சிறப்பிக்கும்மாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தலைமையாசிரியர்

பள்ளி வளாகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் 20.01.2013 ஞாயிறு அன்று நடைபெற்றது. 

எம்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமின் புகைப்பட தொகுப்பு
Sunday, January 13, 2013

10th Std - I, II, III Revision Time Table


Revision Exam
10th  STD   
Subject I st Revision II nd Revision III rd Revision
TAMIL - I PAPER 18.01.2013 11.02.2013 01.03.2013
TAMIL - II  PAPER 19.01.2013 12.02.2013 02.03.2013
ENGLISH  - I PAPER 21.01.2013 13.02.2013 04.03.2013
ENGLISH  - II  PAPER 22.01.2013 14.02.2013 05.03.2013
MATHS 23.01.2013 15.02.2013 06.03.2013
SCIENCE 24.01.2013 18.02.2013 07.03.2013
SOCIAL SCIENCE 28.01.2013 19.02.2013 08.03.2013
TIMING :    01.30 p.m. To 04.00 p.m.

+2 Revision Exam Time Table


REVISION  EXAMINATION TIME TABLE - 2012 - 2013
 XII STD 
SUBJECTS (XII STD)  Ist REVISION  EXAM TIME TABLE
ADVANCED TAMIL/NUTRITION & DIETETICS/BIO CHEMISTRY 18.01.2013
COMPUTER SCIENCE/HOME SCIENCE 19.01.2013
TAMIL - I 21.01.2013
TAMIL - II 22.01.2013
ENGLISH -  I 23.01.2013
ENGLISH  -  II 24.01.2013
MATHS/ZOOLOGY/HISTORY/BUS.MATHS/FISHERIES/MAN.PRIN/OFFICE MANAGEMENT/ NURSING/STATISTICS/MICRO BIOLOGY/VOCATIONAL ACCOUNTANCY   PRACTICAL-I 28.01.2013
PHYSICS/ECONOMICS/TYPE WRITING/VOCATIONAL  AUDITING PRACTICAL-II/AGRICULTURAL PRACTICES THEORY 29.01.2013
CHEMISTRY/ACCOUNTANCY (GENERAL)/ ACCOUNTANCY (VOCATIONAL) / ETICHS & IND. CULTURE/PSYCHOLOGY/POLITICAL SCIENCE/EMA-I /VOC. ACCOUNTANCY & AUDITING THEORY 30.01.2013
BIOLOGY/BOTANY/COMMERCE/G.M./EMA-II/DRESS DESIGNING/CHILD CARE& NUTRITION/RADIO MECHANISM/GEOGRAPHY 31.01.2013
TIMING :  XII STD  01.30 p.m. To 04.30 p.m.