Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Thursday, February 14, 2013

மாநில அளவில் முதலிடம் பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா


மாநில அளவில் முதலிடம் பெற்ற எம்பள்ளி சீனியர் பிரிவு கால்பந்தாட்ட அணியினருக்கு, பள்ளி நிர்வாகம் மற்றும் முன்னால் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா 08.02.2013 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

கிராஅத், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, விழாவிற்குத் தலைமை வகித்த - பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நடப்பாண்டு, தான் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், இவ்வளவு பெரிய சாதனையை மாணவர்கள் நிகழ்த்தியிருப்பது தன்னை பெரிதும் மகிழ்வித்துள்ளதாக அவர் தனதுரையில் நெகிழ்வுடன் கூறினார்.


அவரைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் சார்பில், பல்லாக் அப்துல் காதிர் நெய்னா வாழ்த்துரை வழங்கினார். பின்னர் பள்ளியின் முதுநிலை ஆசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் வாழ்த்துரை வழங்கினார். 

அவரைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வர் பெவிஸ்டன் பேரின்பராஜ் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, மற்றொரு சிறப்பு விருந்தினரான - தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சிரோன்மணி சந்திரா வாழ்த்துரை வழங்கினார். 
 
பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி துணை தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், பள்ளி துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

நன்றி உரையை உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் நவில, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.

நிகழ்ச்சி தொகுப்பாளர் : ஆசிரியர் ஆனந்தகூத்தன்

Click here to download photos

No comments:

Post a Comment