Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Wednesday, April 24, 2013

அம்மா திட்டம் முகாம்



மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அனைத்து கிராமத்திலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் வட்டாச்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்களின் குழு ஒரு கிராமத்தில் உள்ள மக்களை தேடிச் சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் 'அம்மா திட்டம்' என்ற முகாம் நேற்று 23.04.2013 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எம்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

 இம்முகாமில் கீழ் கண்ட விபரங்கள் குறித்த மனுக்கள் மட்டும் பெறப்பட்டது:-

1. பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்).
2. குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள்.
3. பிறப்புமற்றும் இறப்பு சான்றிதழ்கள்.
4. சாதிஇ வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள்.
5. வாரிசுரிமைச் சான்றிதழ்கள்
6.முதல் பட்டதாரி - குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான  சான்றிதழ்கள்.       
7.ஆண்வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள்.
8. குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள்.
9. முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள்.
10. துயர் துடைப்பு மனுக்கள் போன்றவைகள் ஆகும்.

பொதுமக்கள் பெரும் திரளானோர் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.

Saturday, April 13, 2013

பொது மருத்துவ முகாம்




பொது சுகாதாரத்துறை மற்றும் காயல்பட்டினம் நகராட்சி இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை எம்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

இந்தச் சிறப்பு முகாமில் பொது மருத்துவம், இரத்த சோகை, காய்ச்சல், நீரிழிவு நோய், கால்வினை நோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண் நோய், மகளிர் நலம், குழந்தைகள் நலம் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சிகிச்சைக்காக தூத்துக்குடி - மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் வந்து இருந்தனர்.


இம்முகாமில் இரத்தத்தில் இரும்பு சத்து அளவு, கொழுப்பு அளவு, சர்க்கரை அளவு அண்டறியும் இரத்த பரிசோதனைகள் உடனுக்குடன் செய்யப்பட்டது. இரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. .சி.ஜி (ECG) கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை, ஸ்கேன் - அல்ட்ரா சோனாகிராம் பரிசோதனைகளும் செய்யப்பட்டது. இதில் 112 ஆண் பயனாளிகள், 109 பெண் பயனாளிகள் என மொத்தம் 221 பயனாளிகள் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.


கண் பரிசோதனைக்கு தனி பிரிவும், தோல் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், எழும்பு முறிவு மற்றும் அறுவை சிகிச்சை, சித்தா மருத்துவம் ஆகியவைகளுக்கும் தனி பிரிவுகளாக செயல்பட்டது. இவைகளில் பரிந்துரைத்து வழங்கப்படும் மருந்துகளையும் இலவசமாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.


Tuesday, April 9, 2013

Special Coaching Class




11ம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 15ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 12ம் வகுப்பிற்கான சிறப்பு வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் தவறாமல் வகுப்பில் கலந்துக் கொள்ளவும்.

தலைமையாசிரியர்

Monday, April 8, 2013

புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா




எம்பள்ளியில் 07.04.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலங்களவை உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித் திட்டம் 2010-2011 நிதியாண்டு ஒதுக்கீட்டின் கீழ் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி N. சிவா M.A., B.L., அவர்கள் பரிந்துரைச் செய்த வகுப்பறைக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு கட்டிடத்தை எம்பள்ளியின் தலைவர் ஜனாப். டாக்டர் M.S. அஷ்ரஃப்  M.D., அவர்கள் திறந்து வைத்தார்கள். பள்ளியின் தாளாளர் ஜனாப். டாக்டர் S.L. முகம்மது லெப்பை M.B.B.S., D.V., அவர்கள், துணைத் தலைவர் ஹாஜி S.M. உஜைர் அவர்கள், பொருளாளர் ஜனாப் K. செய்யது அகமது அவர்கள்,  
 
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்  ஹாஜி. S.A. அகமது முஸ்தபா அவர்கள், ஜனாப் M. கனி அவர்கள்ஹாஜி L.K. லெப்பைத் தம்பி அவர்கள்,  
 
பொதுக்குழு உறுப்பினர்கள் ஹாஜி T.A.S. உவைஸ் அவர்கள், ஜனாப் H.M. கியாது அவர்கள், ஜனாப் P.M.S. ராஸீ அவர்கள் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் ஜனாப் M.A. முகம்மது ஹனிபா M.Sc., M.Ed., அவர்கள் முன்னிலையில் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

 



Tuesday, April 2, 2013

9TH ANNUAL EXAM TIME TABLE 2012-2013


9TH ANNUAL  EXAM TIME TABLE
TAMIL - I PAPER 10.04.2013
TAMIL - II  PAPER 13.04.2013
ENGLISH  - I PAPER 15.04.2013
ENGLISH  - II  PAPER 16.04.2013
MATHS 17.04.2013
SCIENCE 18.04.2013
SOCIAL SCIENCE 19.04.2013
ENVIRONMENT 20.04.2013
TIMING :    IX  STD 01.30 pm. To 04.00 pm.

6TH TO 8TH 3RD TERM SUMMATIVE EXAM 2012-13


6TH TO 8TH  THIRD  TERM SUMMATIVE
TAMIL  10.04.2013
ENGLISH  15.04.2013
MATHS 17.04.2013
SCIENCE 18.04.2013
SOCIAL SCIENCE 19.04.2013
ENVIRONMENT 20.04.2013 
   
TIMING :    VI & VIII 10.00 pm. To 12.30 pm.
TIMING :   VII 01.30 pm. To 04.00 pm.