Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Saturday, April 13, 2013

பொது மருத்துவ முகாம்




பொது சுகாதாரத்துறை மற்றும் காயல்பட்டினம் நகராட்சி இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை எம்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

இந்தச் சிறப்பு முகாமில் பொது மருத்துவம், இரத்த சோகை, காய்ச்சல், நீரிழிவு நோய், கால்வினை நோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண் நோய், மகளிர் நலம், குழந்தைகள் நலம் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சிகிச்சைக்காக தூத்துக்குடி - மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் வந்து இருந்தனர்.


இம்முகாமில் இரத்தத்தில் இரும்பு சத்து அளவு, கொழுப்பு அளவு, சர்க்கரை அளவு அண்டறியும் இரத்த பரிசோதனைகள் உடனுக்குடன் செய்யப்பட்டது. இரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. .சி.ஜி (ECG) கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை, ஸ்கேன் - அல்ட்ரா சோனாகிராம் பரிசோதனைகளும் செய்யப்பட்டது. இதில் 112 ஆண் பயனாளிகள், 109 பெண் பயனாளிகள் என மொத்தம் 221 பயனாளிகள் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.


கண் பரிசோதனைக்கு தனி பிரிவும், தோல் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், எழும்பு முறிவு மற்றும் அறுவை சிகிச்சை, சித்தா மருத்துவம் ஆகியவைகளுக்கும் தனி பிரிவுகளாக செயல்பட்டது. இவைகளில் பரிந்துரைத்து வழங்கப்படும் மருந்துகளையும் இலவசமாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment