Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Wednesday, April 24, 2013

அம்மா திட்டம் முகாம்



மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அனைத்து கிராமத்திலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் வட்டாச்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்களின் குழு ஒரு கிராமத்தில் உள்ள மக்களை தேடிச் சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் 'அம்மா திட்டம்' என்ற முகாம் நேற்று 23.04.2013 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எம்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

 இம்முகாமில் கீழ் கண்ட விபரங்கள் குறித்த மனுக்கள் மட்டும் பெறப்பட்டது:-

1. பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்).
2. குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள்.
3. பிறப்புமற்றும் இறப்பு சான்றிதழ்கள்.
4. சாதிஇ வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள்.
5. வாரிசுரிமைச் சான்றிதழ்கள்
6.முதல் பட்டதாரி - குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான  சான்றிதழ்கள்.       
7.ஆண்வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள்.
8. குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள்.
9. முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள்.
10. துயர் துடைப்பு மனுக்கள் போன்றவைகள் ஆகும்.

பொதுமக்கள் பெரும் திரளானோர் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.

No comments:

Post a Comment