Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Tuesday, June 4, 2013

பணி நிறைவு விழா





எம்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி 31.05.2013 முதல் பணி ஓய்வுபெற்ற ஜனாப். எம்.. முகம்மது ஹனிபா அவர்களுக்கு பணி நிறைவு விழா 03.06.2013 அன்று பள்ளி வளாகத்தில் வைத்து தலைவர் டாக்டர் ஹாஜி எம்.எஸ். அஸ்ரப் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.




விழாவில் தலைமை ஆசிரியரின் பணியின் சிறப்புரை பாராட்டி முன்னாள் தலைமையாசிரியர் திரு. ஞானையா, பள்ளி தாளாளர் டாக்டர் முகம்மது லெப்பை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக புதிய தலைமையாசிரியர் எம்..எஃப். செய்யது அகமது வரவேற்று பேசினார்கள். நிகழ்வின் முடிவில் முதுகலை ஆசிரியர் டேவிட் செல்லப்பா அவர்கள் நன்றியரை கூற நிகழ்ச்சி நிறைவுபெற்றது.



விழாவில் பள்ளி உதவி செயலர் ஹாஜி சதக்கத்துல்லா, பொருளாளர் ஜனாப் ஹாஜி எல்.கே.கே. செய்யது அகமது, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜனாப் ஹாஜி எல்.கே. லெப்பை தம்பி, ஜனாப் ஹாஜி எல்.டி. இப்றாஹீம், ஜனாப் ஹாஜி எம். கனி, ஜனாப் ஹாஜி கே.எஸ். ஷேக் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment