Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Tuesday, July 2, 2013

வினாடி-வினா போட்டியில் வெற்றி

கத்தர் காயல்நல மன்றத்தின் சார்பில் காயல் நகர பள்ளி மாணவ மாணவியருக்கான மாபெரும் வினாடி வினா போட்டி 30-6-2013 ஞாயிறு மாலை 4.30 மணியளவில் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் இப்போட்டி இடம் பெற்றது. 

இக்ராஃ கல்வி சங்கம் மற்றும் காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்போட்டியை ஜனாப் எல்.டி. முஹம்மது இப்றாஹீம் பொறுப்பேற்று நடத்தினார்.
  தேர்வு போட்டியில் நமதூரைச் சார்ந்த 7 பள்ளிக்கூடங்களின் அணிகள் பங்கு பெற்றன. மொத்தம் 441 பேர் இப்போட்டியில் பங்கு
பெற்றனர். இறுதிப் போட்டியில் எல்.கே. மேனிலைப் பள்ளியைச் சார்ந்த 4 அணிகளும், சென்ட்ரல் மேனிலைப் பள்ளியைச் சார்ந்த 2 அணிகளும் இடம் பெற்றன. முதலிடம் பெற்ற அணிக்கு ரூபாய் 5000 ம், இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு ரூபாய் 3000 ம், மூன்றாம் இடம் பெற்ற அணிக்கு 1000 ம் வழங்கப்பட்டன.
 
 அறிவிக்கப்பட்ட மூன்று இடங்களையும் எம்பள்ளியே பெற்று வெற்றி அடைந்தது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை பரிசாக 
அளிக்கப்பட்டது. 
 
இறுதிப் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும், பதக்கமும், சான்றிதழும் துவக்கமாக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 
இக்ராஃ கல்வி சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான அல்ஹாஜ் டி.ஏ.எஸ்.முஹம்மது அபுபக்கர், அல்ஹாஜ் எம்.ஏ.எஸ்.ஜரூக், அல்ஹாஜ் ஏ.எம்.இஸ்மாயில் நஜீப், அல்ஹாஜ் வாவு நாஸர்,துபை காயல்மன்றத்தைச் சார்ந்த அல் ஹாஜ் எஸ்.ஏ. காஜா, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி அல்ஹாஜ் தர்வேஸ், ரெட் ஸ்டார் சங்க தலைவர் அல்ஹாஜ் எம். சேக் அப்துல் காதர் மற்றும் பலர் மாணவர்களுக்குரிய பரிசுத் தொகை, பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர். 

No comments:

Post a Comment