Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Tuesday, July 16, 2013

காமராசர் பிறந்த நாள்



கல்விக் கண் திறந்த போற்றுதலுக்குரிய பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினவிழா தமிழக அரசால் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. நாடெங்கும் நடைபெறும் இவ்விழாவில் ஓர் அங்கமாக கல்வி வளர்ச்சி நாள் விழா 15.07.2013 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் எம்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் உடற்பயிற்சி கல்வி ஆசிரியர் எஸ்.வேலாயுதம் தலைமையேற்றார். தலைமையாசிரியர் என்.ஏ.எப். செய்யிதகமது எம்.எஸ்சி.எபில் முன்னிலை பொறுப்பேற்றார்.


பள்ளியின் முதுகலை வரலாற்று ஆசிரியர் ஏ.ஜே. முஸ்தபா எம்.ஏ. சிறப்புரை நிகழ்த்தினார். முதுகலை வரலாற்று ஆசிரியர் பி. ஆனந்த கூத்தன் நன்றியுரை வழங்கினார்.
 
பெருந்தலைவர் காமராஜர் குறித்த பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களில் 8ஆவது வகுப்பு பயிலும் முஹம்மது சமீம் முதல் பரிசு பெற்றார். 
பெருந்திரளான மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
நன்றி : kayalconnection.com

No comments:

Post a Comment