Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Friday, August 30, 2013

சீனியர் பிரிவு கால்பந்தாட்ட அணி மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி

தூத்துக்குடியில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையிலான மாவட்ட அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் ஜுனியர் மற்றும் சீனியர் பிரிவு  போட்டிகள் இன்று (30.08.2013) நடைபெற்றது.

14 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவு போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும், தூத்துக்குடி புனித தாமஸ் மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இப்போட்டி சமனில் முடிவுற்றதால் சமநிலை முறிவில் 2-3 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி ஜுனியர் அணி தோல்வியுற்றது.

17 வயதுக்குட்பட்டோருக்கான சீனியர் பிரிவில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும், தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இப்போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இன்று மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி தூத்துக்குடி புனித லசால் மேனிலைப்பள்ளி அணியுடன் மோதியது. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று சீனியர் அணி மண்டல அளவிலான  போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.

Thursday, August 29, 2013

சூப்பர் சீனியர் கால்பந்து அணி மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி.

பள்ளிகளுக்கிடையிலான வட்டார அளவிலான கால்பந்து போட்டிகள் கடந்த் 13 மற்றும் 14ம் தேதிகளில் திருச்செந்தூர் ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் எம்பள்ளியை சார்ந்த ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் அணியினர், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றனர். 

ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் 29.08.2013 மற்றும் 30.08.2013 ஆகிய தினங்களில் தூத்துக்குடி வ.வு.சி. கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்று காலை நடைபெற்ற சூப்பர் சீனியர் பிரிவுக்கான முதல் போட்டியில் தூத்துக்குடி லசால் மேல்நிலைப் பள்ளி அணியினருடன் விளையாடிய எம்பள்ளி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. 

மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் அணியுடன் விளையாடிய போட்டி 0-0 கோல் கணக்கில் முடிவுற்றது. சமநிலை முறிவு முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று எம்பள்ளி சூப்பர் சீனியர் கால்பந்து அணியினர் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நாறை நடைபெறும் போட்டிகளில் ஜுனியர் மற்றும் சீனியர் அணியினர் விளையாட உள்ளனர்.

Friday, August 23, 2013

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஹனிஃபா அவர்களுக்கு பள்ளியின் நிர்வாகம் சார்பில் கேடயம் வழங்கி பாராட்டு!

எம்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி 31.05.2013 முதல் பணி ஓய்வு பெற்ற ஜனாப். எம்.ஏ. முஹம்மது ஹனிபா அவர்களுக்கு பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா 23.08.2013 வெள்ளிக்கிழமை (இன்று) பள்ளி வளாகத்தில் வைத்து தலைவர் டாக்டர் ஹாஜி எம்.எஸ். அஸ்ரப் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக ஹாஃபிழ் கே.எம்.ஏ ஷேக் முஹம்மது இறைமறை ஓதி துவக்கி வைத்தார்.


அதனைத்தொடர்ந்து வரவேற்புரையின்போது முன்னாள் தலைமை ஆசிரியரின் பணியின் சிறப்பினை பாராட்டி இன்னாள் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப் செய்து அஹமது பேசினார்.


அதன் பின்னர் பள்ளியின் தாளாளர் டாக்டர் முகம்மது லெப்பை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பேசினார்கள். முன்னாள் தலைமை ஆசிரியர் முஹம்மது ஹனிஃபா அவர்களுக்கு பள்ளி தலைவர் டாக்டர் ஹாஜி எம்.எஸ். அஸ்ரப்  அவர்களால் நினைவு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


பள்ளியின் இந்நாள், முன்னாள் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர் கங்காதரன் ஐ.ஏ.எஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.


அத்தோடு சென்ற ரமளானில் (1434) நகரில் உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் "தராவீஹ்" என்ற நோன்பின் இரவு தொழுகைகளை முன்னின்று வழி நடத்திய 34 ஹாஃபிழ்களுக்கு பொன்னாடை போர்த்தி கண்ணியப்படுதப்பட்டது.


அதனைத்தொடர்ந்து எல்.கே மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் எம்.ஏ செய்யது இபுறாஹீம் சேவைகளில் முன்மாதிரியாக விளங்கும் முன்னாள் தலைமை ஆசிரியரின் பங்களிப்பை வெகுவாக பாராட்டி பேசியதோடு, மாணவர்களுக்கும் நல்ல பல அறிவுரைகளை வழங்கினார்.

முன்னாள் தலைமை ஆசிரியரின் பணிகள் மீண்டும் தொடர்ந்துகொண்டிருப்பதை நினைத்து தாம் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார்.


முன்னாள் தலைமை ஆசிரியரின் பணிகள் மீண்டும் தொடர்ந்துகொண்டிருப்பதை நினைத்து தாம் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார்.


நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பள்ளியின் அரபி பயிற்றுவிக்கும் ஆசிரியர் சுபைர் அலி எம்.ஏ ஆலிம் பாக்கவி அவர்கள் நிகழ்ச்சியை அழகுற ஒருங்கிணைத்தார்.


இறுதியில் நன்றியுரை மற்றும் நாட்டுபானுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 நன்றி : kayalnews.com

For view more photos : Like our facebook page "lk schools"

இறைவழிபாட்டுக் கூட்டத்தில் எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு கோப்பையை வென்ற அணி மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

 ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு மாநில அளவிலான 18-வது ஆண்டு பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி கடந்த 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்றது.


 இதன் இறுதிப்போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி 'ஏ' அணியும், ஜேம்ஸ் நினைவு மேல்நிலைப் பள்ளி பிரகாசபுரம் அணியும் விளையாடின. இதில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


இம்மாணவர்களை கவுரவிக்கும் முகமாக (22/08/2013) காலை நடைபெற்ற இறைவழிபாட்டு கூட்டத்தில் அவர்கள் அழைக்கப்பட்டு தனிநபர் பரிசுகளும், சுழற்கோப்பையும், பள்ளிக்கான கேடயமும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு சுழற்கோப்பையை எல்.கே.மேனிலைப்பள்ளி ‘ஏ’ அணி வென்றது!

 காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில், ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு கோப்பைக்கான – பள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான கால்பந்துப் போட்டிகள் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
 

நடப்பாண்டின் இறுதிப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி ‘ஏ’ அணி வெற்றிபெற்று, கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. விபரம் வருமாறு:-

ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு கோப்பைக்கான – பள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான கால்பந்துப் போட்டிகள் இம்மாதம் 15ஆம் தேதி துவங்கி, 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இச்சுற்றுப்போட்டியில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 பள்ளிகளின் அணிகள் பங்கேற்றன.

20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 04.30 மணியளவில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி 'ஏ' அணியும், பிரகாசபுரம் ஜேம்ஸ் நினைவு மேனிலைப்பள்ளி அணியும் மோதின.  

ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வீரர் அஃப்ரஸ் முதல் கோலை அடித்து, தனதணியின் கணக்கைத் துவக்கினார். 03ஆவது நிமிடத்தில், வாஸிஃப் இரண்டாவது கோலை அடித்தார். எதிரணியினர் சுதாரிப்பதற்குள், ஆட்டத்தின் 09ஆவது நிமிடத்தில், முஹம்மத் ஒரு கோலை அடித்து, தனதணியின் கணக்கை 3-0 என்றாக்கினார். பின்னர், முதற்பாதி ஆட்டம் நிறைவுறும் வரை ஈரணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
 
இப்போட்டியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட ஜேம்ஸ் நினைவு மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் தங்கராஜுக்கு, ஆட்டத்தின் இடைவேளையின்போது, ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.  

இரண்டாவது பாதி ஆட்டத்தில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. பின்னர், ஆட்டம் முடிவடையும் வரை எந்த அணியும் கோல் அடிக்காததால், 4-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி ‘ஏ’ அணி வெற்றிபெற்றது.

இறுதிப்போட்டியைக் காண, நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு ஆர்வலர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
 

மஃரிப் தொழுகை இடைவேளைக்குப் பின், இரவு 07.00 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், திருச்செந்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் எம்.ஞானசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கான கோப்பைகளையும், வீரர்களுக்கான சிறப்புப் பரிசுகளையும் வழங்கினார்.
 

 அனைத்துப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், துணைத்தலைவர்களான ஹாஜி எஸ்.அக்பர்ஷா, ஹாஜி எஸ்.எம்.உஸைர், தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், உடற்கல்வி ஆசிரியர்களான எஸ்.வேலாயுதம், எல்.ஜமால் முஹம்மத் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

நன்றி : kayalpatnam.com

For more photos : like our school facebook page "lk schools"

கிரிக்கெட் அணி மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி


கடந்த 16.08.2013 மற்றும் 17.08.2013 ஆகிய தேதிகளில் வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி டாக்டர் சிவந்தி உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

எம்பள்ளி கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் கமலாவதி மேல்நிலைப்பள்ளி அணியினருடன் விளையாடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றனர்.

KAMALAVATHI HSS - 88 ALL OUT (20 OVERS)
LKHSS - 89/5 ( 9 OVERS)

17.08.2013 அன்று காலை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் திருச்செந்தூர் காஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியினருடன் விளையாடி வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றனர்.

LKHSS - 134/4 (20 OVERS)
KANCHI HSS - 100 ALL OUT

மாலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியினருடன் விளையாடி வெற்றிப்பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றது.


LKHSS - 136/6 (20 OVERS)
GOVT. BOYS HSS - 104/6 (20 OVERS)


வெற்றிப்பெற்ற அணியினரை நிர்வாகிகள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினார்கள்.

சுதந்திர தின விழா

நம் தாய்த்திருநாட்டின் 67 வது சுதந்திர தின விழா 15.08.2013 வியாழன் அன்று காலை பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாக்குழு உறுப்பினர் மரியாதைக்குரிய ஹாஜி எஸ். செய்யது அகமது அவர்கள் கலந்துக் கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் ஜனாப் செய்யது அகமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
விழாவின் போது மாணவர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். மேலும் தேசபக்திப் பாடல், கொடிப்பாடல், பள்ளிப்பாடல், எல்.கே. நினைவுப்பாடல்கள் பாடப்பட்டது. 
எல்.கே. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜனாப் பீர் முகம்மது அவர்கள் நன்றியுரை வழங்க இறுதியில் தேசிய கீதம் முழுங்க விழா இனிதே நிறைவு பெற்றது.

மேலதிக புகைப்படங்களுக்கு lk schools என்ற facebook பக்கத்தில் காணவும்.

Thursday, August 15, 2013

மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டி (LK Trophy 2013)இன்று மாலை துவங்குகிறது

எம்பள்ளி சார்பாக நடத்தப்பட்டு வரும் ஹாஜி எல்.கே. லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ. சுலைமான் நினைவு பள்ளிகளுக்கு இடையிலான 18ம் ஆண்டு கால்பந்தாட்டப் போட்டி இன்று 15.08.2013 மாலை முதல் 20.08.2013 வரை ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

இன்றைய முதல் நாள் போட்டி சிறப்பு விருந்தினராக 
திரு. S. இராமசாமி M.Sc., M.Ed., M.Phil., அவர்கள் 
( தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, உமரிக்காடு ) 
துவக்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்கள்.

இச்சுற்றுப் போட்டியில் எல்.கே.மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டணம் - புனித லசால் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி - புனித மாற்கு மேல்நிலைப்பள்ளி, மூக்குப்பேரி - S.H.N. எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் - புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, வி.கே.புரம் - கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர் - ஹமீதியா மேல்நிலைப்பள்ளி, நாகப்பட்டணம் - முஹைதீன் மேல்நிலைப்பள்ளி, சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டணம் - ஜேம்ஸ் நினைவு மேல்நிலைப்பள்ளி, பிரகாசபுரம் - R.S.K. மேல்நிலைப்பள்ளி, திருச்சி ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளது. இப்போட்டிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறும்.

போட்டிற்கான ஏற்பாடுகளை நிர்வாக்குழுவினர், தலையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் செய்து வருகின்றனர்.

FIXTURES :


கால்பந்து மற்றும் கபாடி அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி

வட்டார அளவிலான கால்பந்து மற்றும் கபாடி போட்டிகள் கடந்த 12.08.2013 மற்றும் 13.08.2013 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டிகளில் கலந்துக் கொண்ட எம்பள்ளி கால்பந்து (ஜுனியர் பிரிவு, சீனியர் பிரிவு, சூப்பர் சீனியர் பிரிவு) அணியினர் மற்றும் சீனியர் கபாடி அணியினர் வென்று மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

வட்டார அளவிலான போட்டி முடிவுகள் :

ஜூனியர் பிரிவு கால்பந்து :
 
ஜூனியர் பிரிவில் (14 வயதிற்கு கீழ்) கால்பந்தாட்டப் போட்டியில், திருச்செந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் மேனிலைப் பள்ளியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
 
இறுதிப் போட்டியில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியை 6-0 என்ற கோல்கணக்கில் வென்று, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சீனியர் பிரிவு கால்பந்து :
 
சீனியர் பிரிவில் (17 வயதிற்கு கீழ்)  கால்பந்தாட்டப் போட்டியில், திருச்செந்தூர் ஸ்டார்ஸ் மாடல் மெட்ரிக் மேனிலைப் பள்ளியை 8-0 என்ற கோல் கணக்கில் வென்று, இறுதிப் போட்டிக்கு  தகுதி பெற்றது.
 
இறுதிப் போட்டியில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி அணியுடன் நடைபெற்ற போட்டி சமனில் முடிவு பெற்றது. டைபிரேக்கரில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றது.

சூப்பர் சீனியர் பிரிவு கால்பந்து :
 
சூப்பர் சீனியர் பிரிவில் (19 வயதிற்கு கீழ்)  கால்பந்தாட்டப் போட்டியில் வீரபாண்டியன்பட்டினம் புனித தாமஸ் மேனிலைப் பள்ளியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

சீனியர் பிரிவு கபாடி :

17 வயதிற்குட்பட்ட சீனியர் பிரிவில் கபடி போட்டியில், அரசு மேனிலைப் பள்ளி நடு நாலுமூலைக் கிணறு பள்ளியை 75-34 என்ற புள்ளி கணக்கில் வென்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அரை இறுதிப் போட்டியில் கே.ஏ. மேனிலைப் பள்ளி, பேயன்விளை அணியை 50-40 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
 
இறுதிப் போட்டியில் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு மேனிலைப் பள்ளி, திருச்செந்தூர் அணியை 50-48 என்ற புள்ளி கணக்கில் வென்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றது.

வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துக்கள்..... 
அவர்களுடைய சாதனை தொடரட்டும்...
 

 

Tuesday, August 13, 2013

இஃப்தார் நிகழ்ச்சி

 எம்பள்ளி நிர்வாகம் சார்பில் இஃப்தார் விருந்து 
கடந்த 02.08.2013 அன்று பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் திரு.கண்ணன், மருத்துவர் திரு.பாவநாசகுமார் மற்றும் கே.எம்.டி.மருத்துவமனையின் மேளாளர் ஜனாப்.அப்துல் லத்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 நிகழ்வின் துவக்கமாக பள்ளியில் ஆரபி ஆசிரியர் மௌலவி ஜனாப்.சுபைர் அலி இறைமறை வசனத்தை ஓதினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜனாப்.M.A.F.செய்யது அஹமது அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து மௌலவி. சுபைர் அலி நோன்பின் மாண்பு குறித்து சிற்றுரையாற்றினார்கள். பின்னர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொண்னாடை போர்த்து நிகழ்வு நடைபெற்றது.
துவக்கமாக பள்ளியின் தலைவர் மருத்துவர் ஜனாப்.அஷ்ரஃப் அவர்கள் மருத்துவர் திரு.கண்ணன் அவர்களுக்கு பொண்னாடை போர்த்தினார்கள். பள்ளியின் தாளாளர் மருத்துவர் ஜனாப்.முஹம்மது லெப்பை அவர்கள் மருத்துவர் திரு.பாவநாசகுமார் அவர்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜனாப்.M.A.F.செய்யது அஹமது அவர்கள் கே.எம்.டி.மருத்துவமனையின் மேளாலர் ஜனாப். அப்துல் லத்தீஃப் அவர்களுக்கும் பொண்னாடை போர்த்தினார்கள்.
தொடர்ந்து மௌலவி. சுபைர் அலி அவர்கள் துஆ ஓதினார்கள், இறுதியாக தலைமை ஆசிரியரின் நன்றியுரைக்குப்பின் இஃப்தார் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மஃரிப் தொழுகையை பள்ளி அரபி ஆசிரியர் ஜமாஅத்தாக வழிநடத்தினார்.
இந்நிகழ்வில் பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர்கள் திரு.ஞனையா மற்றும் ஜனாப்.M.A.ஹனீஃபா, ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் திரு.ஜெபராஜ் ராஜனாயகம், திரு.கின்ஸ்லி உட்பட நகரின் பிரமுகர்கள் மற்றும் இந்நாள் ஆசிரியாகள் அனைவரும் கலந்து கொண்டனர். 

மேலதிக புகைப்படங்களுக்கு LK SCHOOLS என்ற FACEBOOK பக்கத்தில் காணலாம்...