Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Friday, August 23, 2013

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஹனிஃபா அவர்களுக்கு பள்ளியின் நிர்வாகம் சார்பில் கேடயம் வழங்கி பாராட்டு!

எம்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி 31.05.2013 முதல் பணி ஓய்வு பெற்ற ஜனாப். எம்.ஏ. முஹம்மது ஹனிபா அவர்களுக்கு பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா 23.08.2013 வெள்ளிக்கிழமை (இன்று) பள்ளி வளாகத்தில் வைத்து தலைவர் டாக்டர் ஹாஜி எம்.எஸ். அஸ்ரப் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக ஹாஃபிழ் கே.எம்.ஏ ஷேக் முஹம்மது இறைமறை ஓதி துவக்கி வைத்தார்.


அதனைத்தொடர்ந்து வரவேற்புரையின்போது முன்னாள் தலைமை ஆசிரியரின் பணியின் சிறப்பினை பாராட்டி இன்னாள் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப் செய்து அஹமது பேசினார்.


அதன் பின்னர் பள்ளியின் தாளாளர் டாக்டர் முகம்மது லெப்பை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பேசினார்கள். முன்னாள் தலைமை ஆசிரியர் முஹம்மது ஹனிஃபா அவர்களுக்கு பள்ளி தலைவர் டாக்டர் ஹாஜி எம்.எஸ். அஸ்ரப்  அவர்களால் நினைவு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


பள்ளியின் இந்நாள், முன்னாள் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர் கங்காதரன் ஐ.ஏ.எஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.


அத்தோடு சென்ற ரமளானில் (1434) நகரில் உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் "தராவீஹ்" என்ற நோன்பின் இரவு தொழுகைகளை முன்னின்று வழி நடத்திய 34 ஹாஃபிழ்களுக்கு பொன்னாடை போர்த்தி கண்ணியப்படுதப்பட்டது.


அதனைத்தொடர்ந்து எல்.கே மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் எம்.ஏ செய்யது இபுறாஹீம் சேவைகளில் முன்மாதிரியாக விளங்கும் முன்னாள் தலைமை ஆசிரியரின் பங்களிப்பை வெகுவாக பாராட்டி பேசியதோடு, மாணவர்களுக்கும் நல்ல பல அறிவுரைகளை வழங்கினார்.

முன்னாள் தலைமை ஆசிரியரின் பணிகள் மீண்டும் தொடர்ந்துகொண்டிருப்பதை நினைத்து தாம் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார்.


முன்னாள் தலைமை ஆசிரியரின் பணிகள் மீண்டும் தொடர்ந்துகொண்டிருப்பதை நினைத்து தாம் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார்.


நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பள்ளியின் அரபி பயிற்றுவிக்கும் ஆசிரியர் சுபைர் அலி எம்.ஏ ஆலிம் பாக்கவி அவர்கள் நிகழ்ச்சியை அழகுற ஒருங்கிணைத்தார்.


இறுதியில் நன்றியுரை மற்றும் நாட்டுபானுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 நன்றி : kayalnews.com

For view more photos : Like our facebook page "lk schools"

No comments:

Post a Comment