Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Monday, September 30, 2013

வீரர்கள் டெல்லி புறப்பட்டனர்! ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் வழியனுப்பு விழா!!

டெல்லி புறப்படும் அணியினருக்கு வழியனுப்பு விழா, நேற்று மாலை 05.30 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது. எல்.கே.மேனிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், ஆட்சிக்குழு உறுப்பினர்களான எல்.டி.இப்றாஹீம், எல்.கே.லெப்பைத்தம்பி, உடற்கல்வி ஆசிரியர்கள் வேலாயுதம், இஸ்மாஈல், பணி நிறைவு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் ஆகியோரும், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், மூத்த நிர்வாகி ஹாஜி பாளையம் முஸ்தஃபா உள்ளிட்ட அங்கத்தினரும், வீரர்களை வாழ்த்திப் பிரார்த்தித்து வழியனுப்பி வைத்தனர்.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டனர். வீரர்களை வாழ்த்திப் பேசிய நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவுக்குள் வீரர்கள் அனைவரின் குழுப்படத்தைப் பதித்த வாழ்த்து அட்டைகளை, ஐக்கிய விளையாட்டு சங்கம், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகிய நிறுவனங்களுக்கும், சுப்ரடோ போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் வழங்கினார். 
 

இவ்விழாவில், ஐக்கிய விளையாட்டு சங்க அங்கத்தினர், விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள், எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்கள், சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடச் செல்லும் வீரர்களின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  
To View more photos...Like our Facebook page "lkschools"

Sunday, September 29, 2013

சுப்ரடோ கோப்பை கால்பந்தாட்டப்போட்டியில் விளையாடும் வீரர்கள் இன்று மாலை டெல்லி பயணம்

எம்பள்ளி கால்பந்து அணியினர் அக்டோபர் மாதம் புது டில்லியில் நடைபெறவுள்ள சுப்ரடோ கோப்பைக்கான, பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டிகளில், தமிழகம் சார்பாக பங்கேற்கவுள்ளது.

சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடுவதற்காக, இவ்வணியினர் இன்று (29.09.2013) மாலையில், செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலமாக சென்னை சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர். போட்டி நாட்கள் நெருங்குவதையொட்டி அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 (செப்டம்பர் 28) மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் வீரர்கள் தம் பயிற்சியை நிறைவு செய்த பின்னர், அவர்களுக்கு - காயல்பட்டினம் டாஸ் ஹோம் ஸ்டைல்ஸ், பி.எச்.எம்.ரெஸ்டாரெண்ட்,  வி.எஸ்.ட்ரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்களின் அனுசரணையிலும், ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் அன்பளிப்பிலும், கள உடை (ஜெர்ஸி) பூட் (பாதணி), பயணப் பை உள்ளிட்ட உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

எம்பள்ளியின் தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், உடற்கல்வி ஆசிரியர்கள் வேலாயுதம், இஸ்மாஈல், பணி நிறைவு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, அதன் செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், பி.எச்.எம்.ரெஸ்டாரெண்ட் அதிபர் பிரபு ஹபீப் முஹம்மத், அதன் பொறுப்பாளர் ஷேக்னா லெப்பை, டாஸ் ஹோம் ஸ்டைல்ஸ் அதிபர் யு.நவ்ஃபல் உள்ளிட்டோர், வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

நிறைவில், நிகழ்ச்சியில் அங்கம் வகித்தோர், ஐக்கிய விளையாட்டு சங்க அங்கத்தினர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும், நிறுவனங்களால் வழங்கப்பட்ட பல வண்ணக் கள உடைகளையணிந்த வீரர்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். படங்கள் வருமாறு:-
  
 
நன்றி : காயல்பட்டணம்.காம்

Thursday, September 26, 2013

தமிழ்நாடு சார்பில் சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே.மேனிலைப்பள்ளி வீரர்கள் விபரம்! 29ஆம் தேதி புறப்பாடு!! பயிற்சி தீவிரம்!!!


காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அக்டோபர் மாதம் புது டில்லியில் நடைபெறவுள்ள சுப்ரடோ கோப்பைக்கான, பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டிகளில், தமிழகம் சார்பாக பங்கேற்கவுள்ளது.


இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், மேலாளர் மற்றும் பயிற்சியாளர் குறித்த முழு விபரங்கள்:- 

சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடுவதற்காக, இவ்வணியினர் இம்மாதம் 29ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர். போட்டி நாட்கள் நெருங்குவதையொட்டி அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


அன்றாடம் காலை - மாலை வேளைகளில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் இடைவிடாத பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டிகள் புல்தரை மைதானத்தில் நடைபெறும் என்பதைக் கருத்திற்கொண்டு, நாகர்கோவில் நகரிலுள்ள அண்ணா விளையாட்டரங்க புல்வெளி மைதானத்தில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வீரர்கள் - இம்மாதம் 24ஆம் தேதி சிறப்புப் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 

Thanks : Kayalpatnam.com

Saturday, September 21, 2013

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகம்!

எம்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 99 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி நேற்று (20.09.2013) மாலை 5.30 மணியளவில் வினியோகிக்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் பள்ளி அமைந்துள்ள 13ஆவது வார்டின் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு விலையில்லா மிதிவண்டி வினியோகத்தைத் துவக்கி வைத்தார். 


தொடர்ந்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், உதவி தலைமையாசிரியர் டேவிட் செல்லப்பா, பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர்களான எல்.கே.லெப்பைத்தம்பி, எல்.டி.இப்றாஹீம், சமூக ஆர்வலர் எல்.எம்.இ.கைலானீ ஆகியோர் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். 



11ஆம் வகுப்பு பயிலும் 137 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துவக்கமாக வரப்பெற்ற 99 மிதிவண்டிகள் மாணவர்களுக்கு முதற்கட்டமாக வினியோகிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். 

நன்றி : kayalpatnam.com