Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Monday, September 30, 2013

வீரர்கள் டெல்லி புறப்பட்டனர்! ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் வழியனுப்பு விழா!!

டெல்லி புறப்படும் அணியினருக்கு வழியனுப்பு விழா, நேற்று மாலை 05.30 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது. எல்.கே.மேனிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், ஆட்சிக்குழு உறுப்பினர்களான எல்.டி.இப்றாஹீம், எல்.கே.லெப்பைத்தம்பி, உடற்கல்வி ஆசிரியர்கள் வேலாயுதம், இஸ்மாஈல், பணி நிறைவு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் ஆகியோரும், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், மூத்த நிர்வாகி ஹாஜி பாளையம் முஸ்தஃபா உள்ளிட்ட அங்கத்தினரும், வீரர்களை வாழ்த்திப் பிரார்த்தித்து வழியனுப்பி வைத்தனர்.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டனர். வீரர்களை வாழ்த்திப் பேசிய நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவுக்குள் வீரர்கள் அனைவரின் குழுப்படத்தைப் பதித்த வாழ்த்து அட்டைகளை, ஐக்கிய விளையாட்டு சங்கம், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகிய நிறுவனங்களுக்கும், சுப்ரடோ போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் வழங்கினார். 
 

இவ்விழாவில், ஐக்கிய விளையாட்டு சங்க அங்கத்தினர், விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள், எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்கள், சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடச் செல்லும் வீரர்களின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  
To View more photos...Like our Facebook page "lkschools"

No comments:

Post a Comment