Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Friday, October 25, 2013

சீனியர் கால்பந்தாட்ட அணி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி


பள்ளிகளுக்கு இடையிலான மண்டல அளவிலான கால்பந்து போட்டி நேற்று (24.10.2013)  பாளையங்கோட்டை அருகில் உள்ள மேலதடியூர் பி.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் எம்பள்ளி சீனியர் பிரிவு கால்பந்தாட்ட அணி  கோவில்பட்டி - நாடார் மேல்நிலைப் பள்ளி அணியுடன் விளையாடியது. இதில் எம்பள்ளி அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். அந்த அணிக்காக ஃப்ர்ஹான் ஒரு கோலும், மிஸால் இரண்டு கோலும் அடித்தனர். இவ்வெற்றியின் மூலம் நேற்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் சேரன்மாதேவி மண்டலத்தில் இருந்து பங்கேற்ற டோனாவூர் - சந்தோஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி அணியுடன் விளையாடிய எம்பள்ளி அணியினர் முதல் பாதி ஆட்டத்திலேயே 3 கோல்களை அடித்தனர். ஆட்ட நேர இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். அந்த அணிக்காக P.A.T.ஹபீபு ஒரு கோலும், மிஸால் 2 கோலும் அடித்தனர்.

இவ்வெற்றியின் மூலம் மாநில அளவிலான போட்டிக்கு சீனியர் அணி தகுதி பெற்றுள்ளது.

Wednesday, October 23, 2013

கால்பந்து வீரர் தமிழக உத்தேச அணிக்கு தேர்வு!


Abbas.jpg
கடந்த 18-ம் தேதி நடைபெற்ற மாவட்டங்களுக்கிடையேயான 14 வயதுக்குற்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியில், தூத்துக்குடி மாவட்ட அணிக்கு எல்.கே.மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்கள் விளையாடினர்கள். அந்த அணி அரையிறுதிப் போட்டி வரை முன்னேரி திருச்சி அணியிடம் சமநிலை முறிவு முறை-யில் தோல்வியடைந்தது.

தூத்துக்குடி மாவட்ட அணிக்காக தடுப்பாட்ட வீரராக திறம்பட விளையாடிய, காயல்பட்டினம் முஹைதீன் தெருவைச் சேர்ந்த ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஜனாப். S.I. முஹம்மது அலிஅக்பர் அவர்களின் மகன், எல்.கே.மேல்நிலைப் பள்ளியில் 7-ம் "D" பிரிவில் பயின்று வரும் M.A.செய்யது அப்பாஸ் என்ற மாணவன் தமிழ்நாடு அணிக்காக தேர்வு செய்யப்பட்ட 40 வீரர்களை கொண்ட உத்தேச அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
நன்றி : காயல்டைம்ஸ்.காம்

Tuesday, October 22, 2013

பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல்

எல்.கே. மேனிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் 18-10-2013 வெள்ளி மாலை 5 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் முஹம்மது லெப்பை தலைமையேற்றார்.பெற்றோர் அசிரியர் கழகத்தின் தலைவர் பாளையம் S.A.முஸ்தஃபா ஹாஜி, பள்ளியின் துணைச் செயலாளர் S.M.M.சதக்கதுல்லாஹ் (ஹாஜி காக்கா) மற்றும் பள்ளியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் L.T.இப்றாஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையை பள்ளி தலைமை ஆசிரியர் M.A.F.செய்யது அஹமது M.Sc., M.Ed., M.Phil., நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பள்ளி தாளாளர் அவர்கள் தனது கருத்தை பதிவு செய்து ஆலோசனைக் கூட்டத்தை துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் மாணவர்களின் கல்வித்திறன், ஒழுக்கம் குறித்த கலந்துரையாடல் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையே இடம் பெற்றது. பெருமளவு பெண்கள் பங்குபெற்ற இக்கூட்டத்தில் பெற்றோர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தலைமையாசிரியர் பதிலளித்தார்.

Thanks : www.kayalconnection.com

Saturday, October 19, 2013

மடிக்கணினி வழங்கும் விழா 2013



எம்பள்ளியில் கடந்த 2012 - 13ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நேற்று 18.10.2013 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகராட்சி தலைவி திருமதி. I.ஆபிதா, பள்ளியின் தலைமையாசிரியர் ஜனாப் M.A.F. செய்யது அஹமது, பள்ளியின் தாளாளர் மருத்துவர் ஜனாப். S.L. முஹம்மது லெப்பை, நகர்மன்ற துணைத் தலைவர் ஜனாப். S.M.முஹைதீன், 13-வது வார்டு உறுப்பினர் ஜனாப். M.S.M.சம்சுத்தீன், ஜனாப். S.S.M..சதக்கதுல்லாஹ் (ஹாஜி காக்கா) பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ஜனாப். L.T..இப்றாஹீம் மற்றும் ஜனாப். S.E.அமானுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினர்.

Tuesday, October 15, 2013

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்


எல்.கே. மேல்நிலைப்பள்ளியில், இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18.10.13 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடைபெற இருக்கிறது. எனவே அனைத்து பெற்றோர்களும் இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். 

இவண், 
தலைமையாசிரியர், 
எல்.கே.மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டணம்

Monday, October 14, 2013

தேனியில் நடைபெற்ற கிட்டு கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இரண்டாம் இடம்

தேனியில் நடைபெற்ற மாநில அளவில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற கிட்டு கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த 12 முதல் 14-ம் தேதிகளில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்ட காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று (13.10) காலை 11 மணிக்கு நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி அணியுடன் விளையாடியது. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக அஃப்ரஸ் மற்றும் வாஸிஃப் தலா ஒரு கோல் அடித்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி மதுரை அமெரிக்கன் கல்லூரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் பள்ளி அணியுடன் விளையாடியது. இதில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆட்டம் முடிந்தது. சமநிலை முறிவு முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி வெற்றிபெற்றது.

இன்று (14.10) காலை 10 மணிக்கு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியும், கிருஷ்ணகிரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியும் விளையாடியது. ஆட்டத்தின் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியினருக்கு முதல் பாதி ஆட்டத்தின் போது கோல் அடிப்பதற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதனை தவறவிட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் மீண்டும் கிடைத்த வாய்ப்பை எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியின் வீரர்கள் அஃப்ரஸ் மற்றும் வாஸிஃப் தலா ஒரு கோல் அடித்து தமது அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.

இன்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை வெஸ்லி அணியுடன் விளையாடியது. இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்லி அணி வெற்றி பெற்று கிட்டு கோப்பையை தட்டிச் சென்றது.  எல்.கே.மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாம் இடம் பிடித்தனர். இறுதிப்போட்டியில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணிக்காக வீரர்  தாஹிர் ஒரு கோல் அடித்தார்.

Sunday, October 13, 2013

ஆண்டு விழா 2013

எல்.கே. மேனிலைப் பள்ளியின் ஆண்டுவிழா 11-10-2013 ஹாஜி எஸ்.ஏ.மீராசாகிபு அரங்கில் மாலை 5 மணிக்கு துவங்கியது. 12ஆவது வகுப்பு மாணவர் கே.எஸ்.ஏ. சேக் முஹம்மது இறைமறை ஓதி துவங்கிய இந்நிகழ்ச்சிக்கு நிர்வாகத் தலைவர் டாக்டர் எம்.எஸ். அஷ்ரப் எம்.டி. தலைமையேற்றார்.
பள்ளியின் தாளாளர் டாக்டர் முஹம்மது லெப்பை வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமையாசிரியர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். காருகுறிச்சி இராமகிருஷ்ணன் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜானகிராமன் வாழ்த்துரை வழங்கினார். 
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா அகல்லூரி முதல்வர் டாக்டர் எம். முஹம்மது சாதிக் எம்எஸ்சி, எம்.பில் பி.ஹைச்டி. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். 

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில் தமிழக அணியாக பங்கேற்ற எல்.கே. பள்ளி மாணவர்களுக்கும் இப்பள்ளியில் இவ்வாண்டு கல்வியில் பல்வேறு நிலைகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் அவையோர்கள் பரிசளித்து கௌரவித்தனர்.
பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடத்தினார்கள். பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் செல்லப்பா நன்றியுரை நிகழ்த்தினார்.   நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
 
To View more photos.. Like our Facebook Page "lk schools"

விளையாட்டு விழா 2013


எல்.கே. மேனிலைப் பள்ளியில், வருடாந்திர விளையாட்டு தினம் 10-10-2013 வியாழக்கிழமை ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தில் இடம்பெற்றது. அன்று மாலையில், பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் டாக்டர் முஹம்மது லெப்பை தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை 12 ஆவது வகுப்பு மாணவர் கே.எஸ்.ஏ. சேக்முஹம்மது வான்மறை ஓதி துவக்கி வைத்தார். பள்ளி தலைமையையாசிரியர் எம்.ஏ.எஃப். செய்யிதகமது எம்.எஸ்சி.எம்.எட்.எம்பில். வருகை புரிந்தோரை வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி சேவியர் ஜோதி சற்குணம் எம்.எஸ்சி., எம்.ஏ.என்.ஐ.எஸ். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். எல்.கே. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் எம்.பீர் முஹம்மது நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் அவையில் வீற்றிருந்த பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர், சிறப்பு விருந்தினர் ஆகியோர் விளையாட்டு தினத்தில் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

To View more photos... Like our Facebook Page "lk schools"

Friday, October 11, 2013

சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் விளையாடச் சென்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணி ஊர் திரும்பியது!

பள்ளி மாணவர்களுக்கான சுப்ரடோ கோப்பை சர்வதேச கால்பந்து சுற்றுப்போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி துவங்கி இம்மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்போட்டியில்  தமிழ்நாடு மாநிலம் சார்பில் விளையாடச் சென்ற காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி இன்று காலையில் செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலமாக ஊர் திரும்பியது.

காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தை வந்தடைந்த அணி வீரர்களை எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை, ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பிஇ தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம், ஒருங்கிணைப்பாளர் 'ஹிட்லர்' சதக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் குழுவாகச் சென்று வரவேற்பளித்தனர்.







அதனைத் தொடர்ந்து காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் அங்குள்ள கால்பந்து வீரர்கள் வரவேற்பளித்தனர். வீரர்கள் அனைவருக்கும் அங்கு தேனீர் உபசரிப்பு செய்யப்பட்டது. 

 நன்றி : காயல்பட்டணம்.காம்





Thursday, October 10, 2013

ஆசிரியர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி இன்று காலை நடைபெற்றது!

எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா நேற்று (09/10) காலை முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று (10/10) காலை பள்ளி ஆசிரியர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.DSC06847.JPG
12 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்ட இப்போட்டியில் ஆசிரியர் ஜனாப்.மீராதம்பி அவர்கள் தலைமையில் ஒரு அணியும், ஆசிரியர் ஜனாப்.அஜ்மல்கான் அவர்கள் தலைமையில் மற்றொரு அணியும் விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த ஆசிரியர் ஜனாப்.மீரா தம்பி அவர்கள் தலைமையிலான அணி 12 ஓவர்களில் 100 ரன்களை அடித்தனர். அந்த அணிக்காக ஆசிரியர் திரு. ரஞ்சித் கமார் அவர்கள் 44 ரன்களை அடித்தார்.
In.jpg
இரண்டாவது பேட்டிங் துவங்குவதற்கு முன்னர் இரண்டு அணியின் ஆசிரியர்களையும் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப்.L.லெப்பைத்தம்பி அவர்கள், ஆசிரியர் ஜனாப்.செய்யது முஹைதீன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜனாப்.செய்யது அஹமது ஆகியோர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு.வேலாயும் அவர்கள் உடனிருந்தார்கள்.
தொடர்ந்து பேட்டிங் செய்த ஆசிரியர் ஜனாப்.அஜ்மல்கான் அவர்கள் தலைமையிலான அணியினர் 12 ஓவர்களில் 70 ரன்களை மட்டுமே எடுத்து தேல்வி அடைந்தனர். அந்த அணிக்காக உடற்கல்வி ஆசிரியர் ஜனாப்.B.M.இஸ்மாயில் 24 ரன்களை அடித்தார்.
In2_1.jpg
இன்று (10/10) மாலை நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் நேற்றைய போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி உயர்திரு. K.சேவியர் ஜோதி சர்குணம் M.Sc., M.A., N.I.S., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.
 
Thanks : www.kayaltimes.com

Wednesday, October 9, 2013

நமது பள்ளி பங்குபெறும் மற்றுமொரு கால்பந்தாட்டப் போட்டி..


தமிழ்நாடு கால்பந்து கழகம் 2013-2014-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான கிட்டு கோப்பை கால்பந்து போட்டியை பள்ளிகளுக்கிடையே வருகின்ற 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடத்துகிறது.

இப்போட்டியில் வெஸ்லி பள்ளி - சென்னை, நோபள் மெட்ரிக் பள்ளி - விருதுநகர், சந்தோஷ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி - திருநெல்வேலி, S.S.மெட்ரிக் பள்ளி - திருவண்ணாமலை, டான் பாஸ்க் பள்ளி - தஞ்சாவூர், கேரமல் பள்ளி - கண்ணியாகுமரி, அரசு பள்ளி - ராமநாதபுரம், கிரஸன்ட் பள்ளி - வண்டலூர் (காஞ்சிபுரம்), T.S.S.பள்ளி - தர்மபுரி, செயின்ட் மேரீஸ் பள்ளி - புதுக்கோட்டை, N.S.பள்ளி - தேனி, அறிஞர் அண்ணா பள்ளி - பூனமல்லி (திருவள்ளூர்), T.A.C பள்ளி - சிவகங்கை, பாய்லர் பிளான்ட் பள்ளி - திருச்சி, A.C பள்ளி - மதுரை, லிட்டில் ஃபிளவர் பள்ளி - சேலம், செயின்ட் அந்தோனிஸ் பள்ளி - குன்னூர் (நீலகிரி), செயின்ட் மேரீஸ் பள்ளி - திண்டுக்கல், S.C.S.M மெட்ரிக் பள்ளி - நாமக்கல், L.K.மேல்நிலைப் பள்ளி - காயல்பட்டினம், காருன்யா பள்ளி - கோயம்புத்தூர், ஸ்ரீவெங்கடேஷ்வரா பள்ளி - வேலூர், அரசு பள்ளி - ஈரோடு, அரசு பள்ளி - கிருஷ்ணகிரி, ஹாமிதிய்யா பள்ளி - நாகப்பட்டினம் மற்றும் N.L.C பள்ளி - கடலூர் ஆகிய 26 அணிகள் பங்கேற்க உள்ளன.

எம்பள்ளி அணி தனது முதல் போட்டியை 13-ம் தேதி சந்திக்க உள்ளது. இப்போட்டிகள் தேனி-யில் நடைபெற உள்ளது.