Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Saturday, October 5, 2013

எல்.கே.பள்ளி மாணவர்களுக்கான மினிமாரத்தன் போட்டி இன்று (05/10) காலை நடைபெற்றது!

எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா வருகின்ற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விளையாட்டு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, அப்பள்ளி மாணவர்களுக்கிடையேயான மினிமாரத்தன் போட்டி இரண்டு பிரிவுகளாக இன்று காலை நடைபெற்றது.

முதலாவதாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளும் போட்டி துவங்கியது. இப்போட்டியில் 140 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
Marathan2.JPG
இதனை ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் செயலாளர் ஜனாப்.இல்யாஸ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். ஐ.சி.ஐ.சி வங்கி முனையில் துவங்கிய போட்டி, தைக்காத் தெரு, காட்டுதைக்கா தெரு, குத்துக்கல் தெரு, குறுக்கத் தெரு, ஆஸாத் தெர, கஸ்டம்ஸ் ரோடு, மரைக்கார் பள்ளி தெரு, தெரட் ஸ்டார், நெசவுத் தெரு, வீரசடச்சி அம்மன் கோவில் தெரு, சந்தனமாரி அம்மன் கோவில் தெரு வழியாக புதிய பேரூந்து நிலையத்தில் முடிவடைந்தது.
Marathan3.JPG
இப்போட்டியில் 6-ம் வகுப்பு C பிரிவு மாணவர் ஷக்கீல் முதல் இடத்தையும், 8-ம் வகுப்பு A பிரிவு மாணவர் அப்துல் சுக்கூர் இரண்டாம் இடத்தையும், 8-ம் வகுப்பு D பிரிவு மாணவர் ஹரிஹரன் மூன்றாம் இடத்தையும், 7-ம் வகுப்பு C பிரிவு மாணவர் அஃப்சல் நான்காம் இடத்தையும், 7-ம் வகுப்பு C பிரிவு மாணவர் முஹைதீன் ஐந்தாம் இடத்தையும் மற்றும் 7-ம் வகுப்பு C பிரிவு மாணவர் அபுபக்கர் தய்யூப் ஆறாம் இடத்தையும் பிடித்தனர்.
Marathan4.JPG
தொடர்ந்து நடைபெற்ற 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான போட்டி கடற்கரையில் துவங்கியது. இதில் 69 மாணவர்கள் பங்குபெற்றனர். இப்போட்டியை அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜனாப்.செய்யது அஹமது அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
Marathan5.JPG
கடற்கரையில் துவங்கிய போட்டி சித்தன் தெரு, சிறுபள்ளி சந்திப்பு, பெரிய சதுக்கை, காட்டு தைக்காத் தெரு, தைக்காத் தெரு, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சந்திப்பு, பைபாஸ் ரோடு, பேயன்விளை குறுக்கு ரோடு, கே.ஏ.மேல்நிலைப் பள்ளி, L.F.ரோடு வழியாக மாத்மா காந்தி நினைவு வளையம் அருகில் முடிவுற்றது.
Marathan1.jpg
இப்போட்டியில் 12-ம் வகுப்பு D பிரிவு மாணவர் S.T.பஸ்ஸாம் 30 நிமிடம் 33 வினாடியில் கடந்து முதல் இடத்தையும், 9-ம் வகுப்பு B பிரிவு மாணவர் J.M.நஸீர் அஹமது 31 நிமிடங்களில் கடந்து இரண்டாம் இடத்தையும், 9-ம் வகுப்பு D பிரிவு மாணவர் அபு மூன்றாம் இடத்தையும், 10-ம் வகுப்பு D பிரிவு மாணவர் இர்ஃபான் நான்காம் இடத்தையும், 9-ம் வகுப்பு C பிரிவு மாணவர் காமில் ஐந்தாம் இடத்தையும் மற்றும் 9-ம் வகுப்பு A பிரிவு மாணவர் புஹாரி ஆறாம் இடத்தையும் பிடித்தனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா தலைமையில் ஆசிரியபெருமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Thanks : kayaltimes.com

No comments:

Post a Comment