Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Saturday, October 5, 2013

திரிபுரா அணியுடனான போட்டி டிரா

54-வது சுப்ரதோ கோப்பைக்கான சர்வதேச கால்பந்து போட்டியின் இன்றைய (04/10) காலை போட்டியில் நம் பள்ளி அணியும், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அணியுடன் விளையாடியது. 
இதில் முதல் பாதி ஆட்டத்தில் நம் பள்ளி அணியினர் நிதானமாக விளையாடிய போதிலும், திரிபுர அணியினர் ஆக்ரோஷமாக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நம் பள்ளி அணிக்கு கோல் அடிப்பதற்கான வாய்ப்பு ஒரு முறை மட்டுமே கிடைத்தது. அதனை அந்த அணி வீரர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லை.

திரிபுரா அணியினருக்கு கிடைத்த 4 வாய்ப்புகளையும் நம்பள்ளி அணியின் கோல் கீப்பர் உமர் நேர்த்தியாக தடுத்து அவர்களது முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாது பாதி ஆட்டத்திலும் திரிபுர அணியினர் கோல் அடிப்பதற்கு எடுத்த முயற்சிகளை நம் பள்ளி அணியினர் தங்களது நேர்த்தியான தடுப்பாட்டத்தின் மூலம் முறியடித்தனர்.

எனவே போட்டி முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது.

எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி தனது இரண்டாவது போட்டியில் நாளை (05.10.2013) டெல்லி அணியுடன் விளையாட உள்ளது.


No comments:

Post a Comment