Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Monday, October 14, 2013

தேனியில் நடைபெற்ற கிட்டு கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இரண்டாம் இடம்

தேனியில் நடைபெற்ற மாநில அளவில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற கிட்டு கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த 12 முதல் 14-ம் தேதிகளில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்ட காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று (13.10) காலை 11 மணிக்கு நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி அணியுடன் விளையாடியது. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக அஃப்ரஸ் மற்றும் வாஸிஃப் தலா ஒரு கோல் அடித்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி மதுரை அமெரிக்கன் கல்லூரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் பள்ளி அணியுடன் விளையாடியது. இதில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆட்டம் முடிந்தது. சமநிலை முறிவு முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி வெற்றிபெற்றது.

இன்று (14.10) காலை 10 மணிக்கு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியும், கிருஷ்ணகிரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியும் விளையாடியது. ஆட்டத்தின் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியினருக்கு முதல் பாதி ஆட்டத்தின் போது கோல் அடிப்பதற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதனை தவறவிட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் மீண்டும் கிடைத்த வாய்ப்பை எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியின் வீரர்கள் அஃப்ரஸ் மற்றும் வாஸிஃப் தலா ஒரு கோல் அடித்து தமது அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.

இன்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை வெஸ்லி அணியுடன் விளையாடியது. இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்லி அணி வெற்றி பெற்று கிட்டு கோப்பையை தட்டிச் சென்றது.  எல்.கே.மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாம் இடம் பிடித்தனர். இறுதிப்போட்டியில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணிக்காக வீரர்  தாஹிர் ஒரு கோல் அடித்தார்.

No comments:

Post a Comment