Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Saturday, October 5, 2013

டெல்லி அணியுடனான போட்டியில் தோல்வி

SubrotoCup.JPG
சர்வதேச அளவிலான 54-வது சுப்ரட்டோ கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி, புதுடெல்லி DPS Vasant Kunj அணியுடன் விளையாடியது. இதில் முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் டெல்லி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் டெல்லி அணி மேலும் 3 கோல்களை அடித்தது. எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி ஆறுதலுக்காக ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆட்டத்தின் இறுதி வரை போராடியும் எல்.கே.பள்ளி அணியினரால் மேலும் கோல் ஏதும் அடிக்க முடியாததால் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, இப்போட்டித் தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

நாளை (06/10) காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ள இறுதி லீக் போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி, ஏற்கனவே தான் சந்தித்த இரண்டு போட்டிகளையும் வென்றுள்ள மேகலாயா அணியுடன் விளையாட உள்ளது.

No comments:

Post a Comment