Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Monday, December 29, 2014

புதிய அலுவலகம் திறப்பு விழா

 
காயல் மாநகரில் கல்வி சேவையில் சிறந்து விளங்கும் பாரம்பரியமிக்க எல்.கே.மேல்நிலைப்பள்ளியில் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட புதிய அலுவலகத்தை எம்பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினரும், சென்னை தி.நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் உரிமையாளருமான மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஹாஜி S. செய்யது அகமது அவர்கள் நேற்று (29.12.2014) மாலை திறந்து வைத்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
 
அதுசமயம் எம் பள்ளியின் தலைவர் டாக்டர் M.S. அஸ்ரப் அவர்கள், உபதலைவர் ஹாஜி S.அக்பர்ஷா அவர்கள், செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் S.L. முகம்மது லெப்பை அவர்கள், உதவி செயலாளர் ஹாஜி S.M. சதக்கத்துல்லா அவர்கள் மற்றும் நிர்வாகக்குழு, பொதுக்குழு உறுப்பினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

Tuesday, December 9, 2014

மாநில அளவிலானா கால்பந்து போட்டி 2014 : எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி அரையிறுதியில் தோல்வி!


ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் வட்டார, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படுவது வழக்கம்.

இவ்வருடம் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி, காயல்பட்டினம் - சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணியையும், ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் நாசரேத் - மர்காஸிஸ் மேல்நிலைப் பள்ளி அணியையும் வென்றது. மண்டல அளவில் நடைபெற்ற போட்டியில் டோனாவூர் - சந்தோஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி அணியை வென்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றது.

மாநில அளவிலான போட்டிகள் தேனி மாவட்டத்தில் நேற்று (07/12) துவங்கியது இதில் முதல் போட்டியில் டீ-பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி - ராமனாதபுரம் அணியுடன் விளையாடிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக சுலைமான் மற்றும் ஃபயாஸ் தலா ஒரு கோல் அடித்தனர்.

இவ்வெற்றியை அடுத்து, இன்று (08/12) காலை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கம்பைன் மேல்நிலைப் பள்ளி - திருச்சி அணியுடன் விளையாடியது. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி வெற்றிபெற்றது. அந்த அணிக்காக சுலைமான், ஃபயாஸ் மற்றும் அஹமது ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இவ்வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியினர் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் மதுரை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியுடன் விளையாடியது.

இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளது.

Thanks : www.kayaltimes.com

Saturday, December 6, 2014

எம்பள்ளி மாணவர் மாநில அளவிலான கால்பந்து அணிக்குத் தேர்வு!

 
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் 09ஆம் வகுப்பு பயிலும் - காயிதேமில்லத் தெருவைச் சேர்ந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரது மகன் காதர் தாஹா.

இவர் விருதுநகரில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் கால்பந்து அணிக்காக சிறப்புற விளையாடியதையடுத்து மாநில அளவிலான அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது விருதுநகரில் நடைபெறும் 10 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று வரும் இவர் முகாம் நிறைவடைந்ததும் அங்கிருந்து கல்கத்தா சென்று தமிழ்நாடு மாநில அணிக்காக விளையாடவுள்ளார்.


Tuesday, September 16, 2014

சப்ஜூனியர் பிரிவு மாவட்ட கபாடி அணிக்கு எம் பள்ளி மாணவர் தேர்வு!


தமிழக அளவில் நடைபெற உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான சப்ஜூனியர் கபாடி போட்டிக்கு தூத்துக்குடி மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு கடந்த 11-ம் தேதி ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதிலும் இருந்து 104 கபாடி வீரர்கள் பங்கேற்ற இத்தேர்வு முகாமில் எம்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும்  மங்களாவடியைச் சேர்ந்த M.சந்ரு (த/பெ. P.முத்துராஜ்) என்ற மாணவன் தேர்வு பெற்றுள்ளார். இவர் சீனியர் பிரிவு கபாடி அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு கடந்த இரண்டு தினங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டது. இவ்வணியினர் வருகின்ற 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை திருப்பூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

ஆண்டு விழா 2014 ! சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன!!


காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழா இம்மாதம் 12ஆம் நாள் வெள்ளிக்கிழமை 16.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி நிர்வாகிகள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.





பள்ளி ஆசிரியர்களான பீ.ஆனந்தக்கூத்தன், மவ்லவீ எச்.ஜுபைர் அலீ பாக்கவீ ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். பள்ளி மாணவர் ஹாஃபிழ் பீ.எம்.ஐ.முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை வரவேற்புரையாற்றினார்.





மேடையில் வீற்றிருந்தோருக்கு ஆண்டு விழாக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.



எல்.கே. துவக்கப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத், புதிய தலைமையாசிரியர் ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.



தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் - பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் பள்ளியின் சாதனைகளை விளக்கும் வகையில் அவ்வறிக்கை அமைந்திருந்தது.



இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய பள்ளியின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் தலைமையுரையாற்றினார்.



சென்னை தென்னக ரெயில்வேயின் தலைமைப் பொறியாளர் எஸ்.ஏ.அப்துல் ரஹ்மான் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார். அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.







தொடர்ந்து, 2013 - 2014 கல்வியாண்டில் பள்ளியின் அனைத்து வகுப்புகளிலும் கல்வித் தரத்தில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அவற்றை வழங்கினர்.













பள்ளியின் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் ஜான் சிரோன்மணி, பள்ளி நலனுக்காக ரூபாய் 50 ஆயிரம் நன்கொடைத் தொகையை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினார்.



அத்துடன் மாலை அமர்வு நிறைவுற்றது. இரவு அமர்வு 19.00 மணியளவில் துவங்கியது. இவ்வமர்வில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பாடல், நாடகம், கலாச்சார நடனம், தஃப்ஸ் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.













பள்ளியின் உதவி தலைமையாசிரியர் கே.எம்.ஐ.செய்யித் முகைதீன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.

இவ்விழாவில் பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.







நன்றி : காயல்பட்டணம்.காம்

Saturday, September 6, 2014

மரண அறிவிப்பு


எல்.கே.மேல்நிலைப்பள்ளியில் 10ம்(ஆங்கில வழி) படித்து வரும் மாணவர் K.A. முஹம்மது அபூபக்கர் (S/o. காழி அலாவுதீன் , குறுக்கத் தெரு) இன்று (06.09.2014) காலை தாருல் பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அன்னாருடைய பாவங்களை மன்னித்து சுவன வாழ்விற்காக துவா செய்ய வேண்டுகிறோம்.

நிர்வாகிகள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள்
எல்.கே.மேல்நிலைப்பள்ளி,
காயல்பட்டணம்

Thursday, August 28, 2014

கத்தர் காயல் நல மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது!!


ஐந்தாமாண்டு வினாடி-வினா போட்டி:

காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஆண்டுதோறும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஐந்தாமாண்டு போட்டி, 22.06.2014 ஞாயிற்றுக்கிழமையன்று 15.30 மணியளவில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெற்றது.


பங்கேற்ற மொத்த அணிகள்:

சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 13 அணிகளும்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 14 அணிகளும்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 23 அணிகளும்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 15 அணிகளும்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 19 அணிகளும்,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 4 அணிகளும்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 25 அணிகளும்
என இந்த 7 பள்ளிகளிலிருந்து, அணிக்கு 3 பேர் வீதம் 113 அணிகளில் 339 மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.

போட்டி நடத்துநர்:

புதுயுகம் தொலைக்காட்சியில், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை தயாரித்து நடத்தும் - கோவை நடராஜன் கிருஷ்ணசாமி இப்போட்டியை நடத்தினார்.







நுழைவுப் போட்டி:

முதற்கட்ட போட்டி எழுத்து முறையில் நடத்தப்பட்டது. போட்டி நடத்துநர் ஆங்கிலத்தில் வாசித்து, தமிழாக்கமும் செய்து விளக்க, மாணவ-மாணவியர் அவற்றுக்கான விடைகளை - கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் எழுதினர்.

நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் விடைத்தாள்களை, கத்தர் காயல் நல மன்றத்துடன் இப்போட்டியை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மதிப்பீடு செய்து, இறுதிப்போட்டிக்குரிய 6 அணிகளை முறைப்படி தேர்வு செய்தனர்.

இறுதிப்போட்டியில் இடம்பெற்ற அணிகள்:

பொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட 26 வினாக்களில், அதிக வினாக்களுக்கு விடையளித்ததன் மூலம்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்
என மொத்தம் 6 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.





மதிப்பீட்டாளர்கள்:

தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ‘நெட்காம்’ புகாரீ, இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் மதிப்பீட்டாளர்களாகக் கடமையாற்றினர்.

கேள்விச் சுற்று, விரைவுக் கேள்விச் சுற்று, அசைபட விரிதிரை மூலம் ஒலி - ஒளிச் சுற்று என பல விதங்களில் கேள்விகள் கேட்கப்பட, மாணவ-மாணவியர் ஆர்வமுடன் விடையளித்தனர்.





எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பை:

நிறைவில்,
எல்.கே.மேனிலைப்பள்ளியின்
எம்.எஸ்.செய்யித் அஹ்மத்,
இசட்.எச்.ஸஈத் அலீ,
எம்.ஐ.ஹபீப் முஹம்மத்
ஆகியோரடங்கிய அணி 55 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றது.

இவ்வணிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களையும், அணி சார்ந்த எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பையையும், பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய நகரப் பிரமுகர் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ வழங்கினார்.







5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டாமிடம்:

எல்.கே.மேனிலைப்பள்ளியின்
பி.விக்னேஷ்,
எஸ்.என்.ஸதக் துஃபைல்,
எஸ்.லட்சுமி நாராயணன்
ஆகியோரடங்கிய அணி 50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது.

இவ்வணிக்கு, ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை, விழாவில் முன்னிலை வகித்த - இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுவின் மூத்த உறுப்பினர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வழங்கினார்.



மூன்றாமிடம்:

சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின்
பாளையம் நஃபீஸத் ஆமினா,
எம்.ஏ.சி.ஃபாத்திமா ஹுமைரா,
எஸ்.எச்.அஹ்மத் தஸ்னீம்
ஆகியோரடங்கிய அணி 45 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றது.

இவ்வணிக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, முன்னிலை வகித்த - இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வழங்கினார்.

 நன்றி : காயல்பட்டணம்.காம்