Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Thursday, January 23, 2014

மாவட்ட பைக்கா போட்டிகள் 2014 : கால்பந்து போட்டியில் L.K.மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி!


2013 - 2014ம் ஆண்டுக்கான மத்திய அரசு, இந்திய விளையாட்டுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் (PANCHAYAT YUVA KRIDA AUR KHEL ABHIYAN (PYKKA) மாவட்ட அளவிலான பைக்கா விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த 21-01-2014 மற்றும் 22-01-2014 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டிகளை தமிழக சுற்றுலாத்தறை அமைச்சர் திரு.S.P.சண்முகநாதன் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் திரு.M.ரவிக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

பைக்கா போட்டியானது, 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கால்பந்து, கூடைப்பந்து, மேஜைபந்து, இறகுப்பந்து மற்றும் பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கால்பந்து போட்டியில் 4 அணிகள் கலந்து கொண்டன. காயல்பட்டினம் L.K.மேல்நிலைப் பள்ளி அணியினர் தங்களது முதலாவது போட்டியில் தூத்துக்குடி லசால் "B" அணியினரை எதிர்கொண்டனர். இதில் L.K.பள்ளி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லசால் "A” அணியினருன் விளையாடினார்கள். இப்போட்டி சமநிலையில் முடிவுற்றதால் சமநிலை முறிவுமுறை கடைபிடிக்கப்பட்டது. இதில் L.K.பள்ளி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

வெற்றிபெற்ற அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.150-ம், வெற்றிக்கு முனைந்த அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.100 வழங்கப்பட்டது. இவ்வொற்றியின் மூலம் மாவட்ட அளவிளான அடுத்த சுற்றுப் போட்டிக்கு L.K.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment