Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Wednesday, March 26, 2014

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்


எம்பள்ளியில் இன்ஷா அல்லாஹ் நாளை 27.03.2014 வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 'பெற்றோர் – ஆசிரியர் கூட்டம்' நடைபெற இருக்கிறது. எனவே அனைத்து பெற்றோர்களும் இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தலைமையாசிரியர்

Wednesday, March 19, 2014

எல்.ஐ.சி சார்பில் வட்டார அளவில் நடப்பாண்டின் சிறந்த பள்ளி மாணவர்களுக்கான விருது!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி.) சார்பில், திருச்செந்தூர் வட்டார அளவில் நடப்பாண்டின் சிறந்த பள்ளி மாணவர்களுக்கான விருது, அப்பள்ளியில் பயின்று வரும் பத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
banner_copy
வருடந்தோறும் வட்டார அளவில் கல்வி, விளையாட்டு மற்றும் பல்திறன் திறமைகளை வெளிக்கொணரும் மாணவர்களுக்கு எல்.ஐ.சி சார்பில் வட்டார அளவில் விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவித்து வருவது வழக்கம்.
1st_pic
இதனடிப்படையில் இவ்வாண்டின் வட்டாரத்தில் சிறந்த பள்ளி மாணவர்களுக்கான விருது, எல்.கே பள்ளியின் துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் பத்து மாணவர்கள் பெற்றிருக்கின்றனர்.
award
எல்.கே. துவக்கப்பள்ளியின் 5 மாணவ - மாணவியர்களான எம்.ஷேக் முஹம்மத் (01ஆம் வகுப்பு) , எம்.சபீதா (2ஆம் வகுப்பு) , எஸ்.அபிநயா (3ஆம் வகுப்பு) ,எஸ்.சரண்யா (4ஆம் வகுப்பு) ,ஆர்.முஹம்மத் ரிழ்வான் (5ஆம் வகுப்பு) மற்றும் எல்.கே மேல்நிலைப்பள்ளியின் மாணவர்களான கே.எஸ்.முஹம்மத் ஹுனைஃப் (6ஆம் வகுப்பு) , எம்.எஸ்.ஸஅதுல்லாஹ் (7ஆம் வகுப்பு), எம்.ஏ.கே.காதர் தாஹா (8ஆம் வகுப்பு), எம்.இஜட். காதர் ஸாஹிப் ரியாஸ் (9 ஆம் வகுப்பு), பி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் (10ஆம் வகுப்பு) ஆகியோருக்கு சிறந்த பள்ளி மாணவர்களுக்கான விருது வழங்கும் பாராட்டு விழா நிகழ்ச்சி, எல்.கே.மேல்நிலைப்பள்ளியின் நிகழ்ச்சியரங்கில் நேற்று 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது,
நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு எல்.ஐ.சி நிறுவன மண்டல அதிகாரிகள், பள்ளியின் ஆட்சி மன்ற குழுவின் துணைச் செயலாளர் ஹாஜி சதக்கதுல்லாஹ், பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக பள்ளி மாணவர் இறைமறை வாசித்து நிகழ்ச்சியை துவக்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பள்ளி பாடல் குழுவினரால் இசைக்கப்பட்டது.
sd_arab
பின்னர் பள்ளியின் தலைமையாசியிரியர் எம்.ஏ.எஃப். செய்யது அஹமது வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் ஆட்சிமன்ற உப தலைவர் ஹாஜி எஸ்.எம் உஜைர் பள்ளி மாணவர்களின் திறமைகளை பாராட்டியும் அவர்களுக்கு விருது வழங்க வந்திருக்கும் எல்.ஐ.சி நிறுவனத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். பள்ளியின் அரபித்துறை ஆசிரியர் ஜுபைர் அலி நிகழ்சிகளை ஒருங்கிணைத்தார்.
salvai
அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள் எல்.ஐ.சி மண்டல நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர்.
பின்னர், திருநெல்வேலி கோட்டம் எல்.ஐ.சி யின் முதுநிலை மேலாளர் திரு.வி.சுப்ரமணியன் சிறந்த மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
pic2_copy_copy_copy_copy_copy_copy_copy_copy_copy_copy_copy
நிகழ்ச்சியின் இறுதியில் எல்.கே தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் என்.பீர் முஹம்மது நன்றியுரையாற்ற்றினார்.
peer
நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
group_copy_copy
இந்நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் எல்.ஐ.சி யின் கிளை மேலாளர் திரு.பி.கே பைஜூ, உதவி கிளை மேலாளர் திரு.சுடலை திருநெல்வேலி எல்.ஐ.சி யின் குழு காப்பீட்டு திட்ட மேலாளர் திரு.ராம்நாத், திருச்செந்தூர் எல்.ஐ.சி. யின் உயர் நிலை அலுவலர் கொமைந்தார் செய்யது இஸ்மாயீல், மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ,மாணவியர், பரிசு பெற்றவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறபித்த்னர்.
நன்றி :  www.kayalnews.com

Tuesday, March 11, 2014

எல்.ஐ.சி. நிறுவனத்தால் சிறந்த பள்ளியாக தேர்வு


திருச்செந்தூர் வட்டார அளவில் கல்வியிலும், விளையாட்டிலும் ஒழுக்க நிலையிலும் சிறந்த பள்ளியாக திகழ்வது எல்.கே.மேல்நிலைப்பள்ளி என L.I.C. நிறுவனத்தார்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 

மேலும் இப்பள்ளியில் 6 முதல் 10 வரை பயிலுகின்ற மாணவர்களில் கல்வி, விளையாட்டு, ஒழுக்கம் இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பரிசுகளும், கேடயமும் வருகின்ற வெள்ளிக்கிழமை (14.03.2014) அன்று வழங்க இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

தலைமையாசிரியர்