Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Thursday, July 24, 2014

ரமழான் 1435: இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி! நிர்வாகிகள், ஆசிரியர்கள், பிரமுகர்கள் பங்கேற்பு!!

எம்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி (ஜூலை 18 - வெள்ளிக்கிழமை) 18.00 மணியளவில், பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கிராஅத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



பள்ளியின் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ, “நோன்பின் மகத்துவம்” எனும தலைப்பில் சிற்றுரையாற்றினார்.







நன்றியுரை, துஆ பிரார்த்தனையைத் தொடர்ந்து நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர் புட்டி, கறிகஞ்சி, வடை வகைகள், பழக்கூழ், குளிர்பானம் ஆகிய உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பள்ளியின் துணைத் தலைவர் எஸ்.எம்.உஸைர், துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, கே.எம்.டி.மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப், நகரப் பிரமுகர்களான ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், ஜெஸ்மின் கலீல், எல்.கே.துவக்கப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத், எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னர், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. 

நன்றி  : காயல்பட்டணம்.காம்

மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்!

கடந்த 2013-14 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்று முடித்த 86 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி  (ஜூலை 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை) 16.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, மடிக்கணினியை மாணவர்களுக்கு வழங்கி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.



பள்ளியின் துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர், பெற்றோர் - ஆசிரியர் சங்க செயலாளர் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, பள்ளியின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா உள்ளிட்டோரும் மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கினர்.





நன்றி  : காயல்பட்டணம்.காம்

Friday, July 4, 2014

பள்ளியின் தலைவர் டாக்டர் அஷ்ரப் அவர்களுக்கு சிறந்த மருத்துவர் விருது..

நமது எல்.கே.மேல்நிலைப்பள்ளியின் தலைவர் டாக்டர் M.S. அஷ்ரஃப் M.D அவர்களுக்கு தமிழ் நாடு அரசு 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த மருத்துவர் விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. 


மருத்துவர்கள் தினமான july 1 அன்று,  சென்னை அரசினர்  தோட்டத்தில் உள்ள, அரசு பன்முக சேவை சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்விருது வழங்கப்பட்டது.