Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Thursday, August 28, 2014

கத்தர் காயல் நல மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது!!


ஐந்தாமாண்டு வினாடி-வினா போட்டி:

காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஆண்டுதோறும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஐந்தாமாண்டு போட்டி, 22.06.2014 ஞாயிற்றுக்கிழமையன்று 15.30 மணியளவில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெற்றது.


பங்கேற்ற மொத்த அணிகள்:

சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 13 அணிகளும்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 14 அணிகளும்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 23 அணிகளும்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 15 அணிகளும்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 19 அணிகளும்,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 4 அணிகளும்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 25 அணிகளும்
என இந்த 7 பள்ளிகளிலிருந்து, அணிக்கு 3 பேர் வீதம் 113 அணிகளில் 339 மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.

போட்டி நடத்துநர்:

புதுயுகம் தொலைக்காட்சியில், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை தயாரித்து நடத்தும் - கோவை நடராஜன் கிருஷ்ணசாமி இப்போட்டியை நடத்தினார்.







நுழைவுப் போட்டி:

முதற்கட்ட போட்டி எழுத்து முறையில் நடத்தப்பட்டது. போட்டி நடத்துநர் ஆங்கிலத்தில் வாசித்து, தமிழாக்கமும் செய்து விளக்க, மாணவ-மாணவியர் அவற்றுக்கான விடைகளை - கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் எழுதினர்.

நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் விடைத்தாள்களை, கத்தர் காயல் நல மன்றத்துடன் இப்போட்டியை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மதிப்பீடு செய்து, இறுதிப்போட்டிக்குரிய 6 அணிகளை முறைப்படி தேர்வு செய்தனர்.

இறுதிப்போட்டியில் இடம்பெற்ற அணிகள்:

பொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட 26 வினாக்களில், அதிக வினாக்களுக்கு விடையளித்ததன் மூலம்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்
என மொத்தம் 6 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.





மதிப்பீட்டாளர்கள்:

தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ‘நெட்காம்’ புகாரீ, இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் மதிப்பீட்டாளர்களாகக் கடமையாற்றினர்.

கேள்விச் சுற்று, விரைவுக் கேள்விச் சுற்று, அசைபட விரிதிரை மூலம் ஒலி - ஒளிச் சுற்று என பல விதங்களில் கேள்விகள் கேட்கப்பட, மாணவ-மாணவியர் ஆர்வமுடன் விடையளித்தனர்.





எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பை:

நிறைவில்,
எல்.கே.மேனிலைப்பள்ளியின்
எம்.எஸ்.செய்யித் அஹ்மத்,
இசட்.எச்.ஸஈத் அலீ,
எம்.ஐ.ஹபீப் முஹம்மத்
ஆகியோரடங்கிய அணி 55 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றது.

இவ்வணிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களையும், அணி சார்ந்த எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பையையும், பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய நகரப் பிரமுகர் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ வழங்கினார்.







5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டாமிடம்:

எல்.கே.மேனிலைப்பள்ளியின்
பி.விக்னேஷ்,
எஸ்.என்.ஸதக் துஃபைல்,
எஸ்.லட்சுமி நாராயணன்
ஆகியோரடங்கிய அணி 50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது.

இவ்வணிக்கு, ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை, விழாவில் முன்னிலை வகித்த - இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுவின் மூத்த உறுப்பினர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வழங்கினார்.



மூன்றாமிடம்:

சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின்
பாளையம் நஃபீஸத் ஆமினா,
எம்.ஏ.சி.ஃபாத்திமா ஹுமைரா,
எஸ்.எச்.அஹ்மத் தஸ்னீம்
ஆகியோரடங்கிய அணி 45 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றது.

இவ்வணிக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, முன்னிலை வகித்த - இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வழங்கினார்.

 நன்றி : காயல்பட்டணம்.காம்

Tuesday, August 26, 2014

தமிழக அரசின் மிதிவண்டி இலவச வினியோகம்! நகர்மன்றத் தலைவர் வழங்கினார்!!


காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 173 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, இன்று 16.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர், துணைச் செயலாளர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரபி ஆசிரியர் ஜுபைர் அலீ பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் அப்துல் ரஸ்ஸாக் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியா எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் வரவேற்புரையாற்றினார்.




காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விழாவிற்குத் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கியதோடு, மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, வினியோத்தைத் துவக்கி வைத்தார்.









தொடர்ந்து, பள்ளியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.



அவரைத் தொடர்ந்து, பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினர்.












பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 173 மாணவர்களுக்கு இவ்விழாவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விழா ஏற்பாடுகளை, எஸ்.பி.பி.புகாரீ, மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள், அலுலவர்கள் செய்திருந்தனர். 

நன்றி : காயல்பட்டணம்.காம்

Friday, August 22, 2014

பெற்றோர், ஆசிரியர் கழகக்கூட்ட அழைப்பிதழ்


காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் சார்பாக வருகின்ற  (25.08.2014, திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில், 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்குபெறும் 'கலந்துரையாடல்' (பெற்றோர் ஆசிரியர் கழகக்கூட்டம்) நிகழ்வு எம்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே மேற்படி வகுப்பில் பயிலும் மாணவர்களது பெற்றோர்கள் இக்கூட்டத்தில் கலந்து சிறப்பிக்கும்மாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமையாசிரியர்
எல்.கே. மேல்நிலைப்பள்ளி,
காயல்பட்டினம்.

Tuesday, August 12, 2014

ஜுனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் கால்பந்து அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி



திருச்செந்தூர் வட்டார அளவிலான  பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள்  ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் வெள்ளாலன்விளை பிசப் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

ஜுனியர் பிரிவு:

ஜுனியர் பிரிவு கால்பந்தாட்டப்போட்டியில் காயல்பட்டணத்தை சார்ந்த எல்.கே.மேல்நிலைப்பள்ளி, சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி, முஹையத்தீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த அணிகள் விளையாடின. இப்போட்டியில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.

இப்போட்டியில் எல்.கே.மேல்நிலைப்பள்ளி அணி 1 – 0 கோல் கணக்கில் வென்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றது.

984171_605084339590879_8593109620247744885_n

சீனியர் பிரிவு:

சீனியர் பிரிவு கால்பந்தாட்டப்போட்டியில் காயல்பட்டணத்தை சார்ந்த எல்.கே.மேல்நிலைப்பள்ளி, சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த அணிகள் விளையாடின. இப்போட்டியில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.

இப்போட்டியில் எல்.கே.மேல்நிலைப்பள்ளி அணி 2 – 1 கோல் கணக்கில் வென்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றது.

LK senior 2014-15

சூப்பர் சீனியர் பிரிவு:

சூப்பர் சீனியர் பிரிவு கால்பந்தாட்டப்போட்டியில் காயல்பட்டணத்தை சார்ந்த எல்.கே.மேல்நிலைப்பள்ளி, சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி, முஸையதீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் மணப்பாடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த அணிகள் விளையாடின. இப்போட்டியில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.

இப்போட்டியில் எல்.கே.மேல்நிலைப்பள்ளி அணி 2 – 0 கோல் கணக்கில் வென்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றது.
LK Super senior 2014-15



Saturday, August 9, 2014

பள்ளிகளுக்கிடையே வட்டார அளவிலானா கால்பந்து போட்டி 2014 : எல்.கே. பள்ளி சூப்பர் சீனியர் அணி மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி!

ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் வட்டார, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படுவது வழக்கம். இவ்வருடம் வட்டார அளவிலான போட்டிகளை வெள்ளாலம்விளை, பிஷப் அசாரியா மேல்நிலைப் பள்ளியினரால் நடத்தப்பட்டு வருகின்றது.

சூப்பர் சீனியர் பிரிவு கால்பந்து போட்டி :

சூப்பர் சீனியர் பிரிவு கால்பந்து போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி, சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி, முஹைய்யித்தீன் மெட்ரிக்குலேசன் பள்ளி, மனப்பாடு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கமலாவதி மேல்நிலைப் பள்ளி ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்றன.
DSC09285.JPG
இன்று (08/08) காலை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணியும், மனப்பாடு அணியும் விளையாடின. இதில் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
DSC09289.JPG
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் எல்.கே. மேல்நிலைப் பள்ளி, முஹிய்யித்தீன் மெட்ரிக்குலேசன் பள்ளியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
DSC09305.JPG
இன்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணியும், எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணியும் விளையாடியது. இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணிக்கு கிடைத்த ஃபிரி கிக் வாய்ப்பை பயன்படுத்திய அந்த அணியின் கேப்டன் B.A. முஹம்மது அஸார் நேர்த்தியாக கோலாக்கினார்.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி வீரர் சுலைமான் நேர்த்தியாக கடத்திக்கொடுத்த பந்தினை எதிர் அணி வீரர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் அச்சர்யப்படவகைக்கும் வகையில் அற்புதமான கோல் ஒன்றை அடித்தார்.
DSC09308.JPG
ஆட்டநேர இறுதி வரை போராடிய சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணியினரால் கோல் ஏதும் அடிக்க இயலாததால் எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பள்ளிகளுக்கிடையே வட்டார அளவிலானா கால்பந்து மற்றும் கபாடி போட்டி 2014 : எல்.கே. பள்ளி ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவு அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி!


ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் வட்டார, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படுவது வழக்கம். இவ்வருடம் வட்டார அளவிலான போட்டிகளை வெள்ளாலம்விளை, பிஷப் அசாரியா மேல்நிலைப் பள்ளியினரால் நடத்தப்பட்டு வருகின்றது.

DSC09277.JPG
ஜூனியர் பிரிவு கால்பந்து போட்டி :

ஜூனியர் பிரிவு கால்பந்து போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி, சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி, முஹைதீன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சி சங்கரா மேல்நிலைப் பள்ளி மற்றும் புன்னக்காயல் பள்ளி ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்றன.

எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணி தான் சந்தித்த முதல் போட்டியில் புன்னக்காயல் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று (07/08) காலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.

DSC09275.JPG
சீனியர் பிரிவு கால்பந்து போட்டி :

சீனியர் பிரிவு கால்பந்து போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி, சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணி, காஞ்சி சங்கரா மேல்நிலைப் பள்ளி அணி மற்றும் புன்னக்காயல் பள்ளி ஆகிய நான்கு அணிகள் பங்குபெற்றன.

இதில் தனது முதலாவது போட்டியில் புன்னக்காயல் பள்ளி அணியுடன் விளையாடிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

இன்று (07/08) காலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணியுடன் விளையாடிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

DSC09276.JPG
சீனியர் பிரிவு கபாடி போட்டி :

சீனியர் பிரிவு கபாடி போட்டியில் திருச்செந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, காயாமொழி அரசு மேல்நிலைப் பள்ளி, நாலுமுனை கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி, எல்.கே.மேல்நிலைப் பள்ளி, அடைக்கலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, வீரபாண்டியபட்டணம் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் வெள்ளாலம்விளை பிஷப் அசாரியா மேல்நிலைப் பள்ளி ஆகிய ஏழு அணிகள் பங்கேற்றன.

எல்.கே. மேல்நிலைப் பள்ளி தனது முதல் போட்டியில் வீரபாண்டியபட்டணம் புனித தாமஸ் அணியுடன் விளையாடியது. இதில் 59-17 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

இன்று (07/08) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாலுமுனை கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி அணியுடன் விளையாடியது. இதில் எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணி 58-16 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றது.

DSC09280.JPG