Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Saturday, August 9, 2014

பள்ளிகளுக்கிடையே வட்டார அளவிலானா கால்பந்து மற்றும் கபாடி போட்டி 2014 : எல்.கே. பள்ளி ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவு அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி!


ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் வட்டார, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படுவது வழக்கம். இவ்வருடம் வட்டார அளவிலான போட்டிகளை வெள்ளாலம்விளை, பிஷப் அசாரியா மேல்நிலைப் பள்ளியினரால் நடத்தப்பட்டு வருகின்றது.

DSC09277.JPG
ஜூனியர் பிரிவு கால்பந்து போட்டி :

ஜூனியர் பிரிவு கால்பந்து போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி, சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி, முஹைதீன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சி சங்கரா மேல்நிலைப் பள்ளி மற்றும் புன்னக்காயல் பள்ளி ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்றன.

எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணி தான் சந்தித்த முதல் போட்டியில் புன்னக்காயல் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று (07/08) காலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.

DSC09275.JPG
சீனியர் பிரிவு கால்பந்து போட்டி :

சீனியர் பிரிவு கால்பந்து போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி, சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணி, காஞ்சி சங்கரா மேல்நிலைப் பள்ளி அணி மற்றும் புன்னக்காயல் பள்ளி ஆகிய நான்கு அணிகள் பங்குபெற்றன.

இதில் தனது முதலாவது போட்டியில் புன்னக்காயல் பள்ளி அணியுடன் விளையாடிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

இன்று (07/08) காலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணியுடன் விளையாடிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

DSC09276.JPG
சீனியர் பிரிவு கபாடி போட்டி :

சீனியர் பிரிவு கபாடி போட்டியில் திருச்செந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, காயாமொழி அரசு மேல்நிலைப் பள்ளி, நாலுமுனை கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி, எல்.கே.மேல்நிலைப் பள்ளி, அடைக்கலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, வீரபாண்டியபட்டணம் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் வெள்ளாலம்விளை பிஷப் அசாரியா மேல்நிலைப் பள்ளி ஆகிய ஏழு அணிகள் பங்கேற்றன.

எல்.கே. மேல்நிலைப் பள்ளி தனது முதல் போட்டியில் வீரபாண்டியபட்டணம் புனித தாமஸ் அணியுடன் விளையாடியது. இதில் 59-17 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

இன்று (07/08) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாலுமுனை கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி அணியுடன் விளையாடியது. இதில் எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணி 58-16 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றது.

DSC09280.JPG

No comments:

Post a Comment