Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Thursday, August 28, 2014

கத்தர் காயல் நல மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது!!


ஐந்தாமாண்டு வினாடி-வினா போட்டி:

காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஆண்டுதோறும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஐந்தாமாண்டு போட்டி, 22.06.2014 ஞாயிற்றுக்கிழமையன்று 15.30 மணியளவில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெற்றது.


பங்கேற்ற மொத்த அணிகள்:

சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 13 அணிகளும்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 14 அணிகளும்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 23 அணிகளும்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 15 அணிகளும்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 19 அணிகளும்,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 4 அணிகளும்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 25 அணிகளும்
என இந்த 7 பள்ளிகளிலிருந்து, அணிக்கு 3 பேர் வீதம் 113 அணிகளில் 339 மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.

போட்டி நடத்துநர்:

புதுயுகம் தொலைக்காட்சியில், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை தயாரித்து நடத்தும் - கோவை நடராஜன் கிருஷ்ணசாமி இப்போட்டியை நடத்தினார்.







நுழைவுப் போட்டி:

முதற்கட்ட போட்டி எழுத்து முறையில் நடத்தப்பட்டது. போட்டி நடத்துநர் ஆங்கிலத்தில் வாசித்து, தமிழாக்கமும் செய்து விளக்க, மாணவ-மாணவியர் அவற்றுக்கான விடைகளை - கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் எழுதினர்.

நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் விடைத்தாள்களை, கத்தர் காயல் நல மன்றத்துடன் இப்போட்டியை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மதிப்பீடு செய்து, இறுதிப்போட்டிக்குரிய 6 அணிகளை முறைப்படி தேர்வு செய்தனர்.

இறுதிப்போட்டியில் இடம்பெற்ற அணிகள்:

பொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட 26 வினாக்களில், அதிக வினாக்களுக்கு விடையளித்ததன் மூலம்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்
என மொத்தம் 6 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.





மதிப்பீட்டாளர்கள்:

தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ‘நெட்காம்’ புகாரீ, இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் மதிப்பீட்டாளர்களாகக் கடமையாற்றினர்.

கேள்விச் சுற்று, விரைவுக் கேள்விச் சுற்று, அசைபட விரிதிரை மூலம் ஒலி - ஒளிச் சுற்று என பல விதங்களில் கேள்விகள் கேட்கப்பட, மாணவ-மாணவியர் ஆர்வமுடன் விடையளித்தனர்.





எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பை:

நிறைவில்,
எல்.கே.மேனிலைப்பள்ளியின்
எம்.எஸ்.செய்யித் அஹ்மத்,
இசட்.எச்.ஸஈத் அலீ,
எம்.ஐ.ஹபீப் முஹம்மத்
ஆகியோரடங்கிய அணி 55 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றது.

இவ்வணிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களையும், அணி சார்ந்த எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பையையும், பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய நகரப் பிரமுகர் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ வழங்கினார்.







5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டாமிடம்:

எல்.கே.மேனிலைப்பள்ளியின்
பி.விக்னேஷ்,
எஸ்.என்.ஸதக் துஃபைல்,
எஸ்.லட்சுமி நாராயணன்
ஆகியோரடங்கிய அணி 50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது.

இவ்வணிக்கு, ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை, விழாவில் முன்னிலை வகித்த - இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுவின் மூத்த உறுப்பினர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வழங்கினார்.



மூன்றாமிடம்:

சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின்
பாளையம் நஃபீஸத் ஆமினா,
எம்.ஏ.சி.ஃபாத்திமா ஹுமைரா,
எஸ்.எச்.அஹ்மத் தஸ்னீம்
ஆகியோரடங்கிய அணி 45 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றது.

இவ்வணிக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, முன்னிலை வகித்த - இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வழங்கினார்.

 நன்றி : காயல்பட்டணம்.காம்

No comments:

Post a Comment