Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Tuesday, September 16, 2014

சப்ஜூனியர் பிரிவு மாவட்ட கபாடி அணிக்கு எம் பள்ளி மாணவர் தேர்வு!


தமிழக அளவில் நடைபெற உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான சப்ஜூனியர் கபாடி போட்டிக்கு தூத்துக்குடி மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு கடந்த 11-ம் தேதி ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதிலும் இருந்து 104 கபாடி வீரர்கள் பங்கேற்ற இத்தேர்வு முகாமில் எம்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும்  மங்களாவடியைச் சேர்ந்த M.சந்ரு (த/பெ. P.முத்துராஜ்) என்ற மாணவன் தேர்வு பெற்றுள்ளார். இவர் சீனியர் பிரிவு கபாடி அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு கடந்த இரண்டு தினங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டது. இவ்வணியினர் வருகின்ற 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை திருப்பூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

ஆண்டு விழா 2014 ! சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன!!


காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழா இம்மாதம் 12ஆம் நாள் வெள்ளிக்கிழமை 16.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி நிர்வாகிகள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி ஆசிரியர்களான பீ.ஆனந்தக்கூத்தன், மவ்லவீ எச்.ஜுபைர் அலீ பாக்கவீ ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். பள்ளி மாணவர் ஹாஃபிழ் பீ.எம்.ஐ.முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை வரவேற்புரையாற்றினார்.

மேடையில் வீற்றிருந்தோருக்கு ஆண்டு விழாக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.எல்.கே. துவக்கப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத், புதிய தலைமையாசிரியர் ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் - பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் பள்ளியின் சாதனைகளை விளக்கும் வகையில் அவ்வறிக்கை அமைந்திருந்தது.இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய பள்ளியின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் தலைமையுரையாற்றினார்.சென்னை தென்னக ரெயில்வேயின் தலைமைப் பொறியாளர் எஸ்.ஏ.அப்துல் ரஹ்மான் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார். அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.தொடர்ந்து, 2013 - 2014 கல்வியாண்டில் பள்ளியின் அனைத்து வகுப்புகளிலும் கல்வித் தரத்தில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அவற்றை வழங்கினர்.

பள்ளியின் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் ஜான் சிரோன்மணி, பள்ளி நலனுக்காக ரூபாய் 50 ஆயிரம் நன்கொடைத் தொகையை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினார்.அத்துடன் மாலை அமர்வு நிறைவுற்றது. இரவு அமர்வு 19.00 மணியளவில் துவங்கியது. இவ்வமர்வில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பாடல், நாடகம், கலாச்சார நடனம், தஃப்ஸ் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளியின் உதவி தலைமையாசிரியர் கே.எம்.ஐ.செய்யித் முகைதீன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.

இவ்விழாவில் பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.நன்றி : காயல்பட்டணம்.காம்

Saturday, September 6, 2014

மரண அறிவிப்பு


எல்.கே.மேல்நிலைப்பள்ளியில் 10ம்(ஆங்கில வழி) படித்து வரும் மாணவர் K.A. முஹம்மது அபூபக்கர் (S/o. காழி அலாவுதீன் , குறுக்கத் தெரு) இன்று (06.09.2014) காலை தாருல் பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அன்னாருடைய பாவங்களை மன்னித்து சுவன வாழ்விற்காக துவா செய்ய வேண்டுகிறோம்.

நிர்வாகிகள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள்
எல்.கே.மேல்நிலைப்பள்ளி,
காயல்பட்டணம்