Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Monday, December 29, 2014

புதிய அலுவலகம் திறப்பு விழா

 
காயல் மாநகரில் கல்வி சேவையில் சிறந்து விளங்கும் பாரம்பரியமிக்க எல்.கே.மேல்நிலைப்பள்ளியில் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட புதிய அலுவலகத்தை எம்பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினரும், சென்னை தி.நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் உரிமையாளருமான மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஹாஜி S. செய்யது அகமது அவர்கள் நேற்று (29.12.2014) மாலை திறந்து வைத்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
 
அதுசமயம் எம் பள்ளியின் தலைவர் டாக்டர் M.S. அஸ்ரப் அவர்கள், உபதலைவர் ஹாஜி S.அக்பர்ஷா அவர்கள், செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் S.L. முகம்மது லெப்பை அவர்கள், உதவி செயலாளர் ஹாஜி S.M. சதக்கத்துல்லா அவர்கள் மற்றும் நிர்வாகக்குழு, பொதுக்குழு உறுப்பினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

Tuesday, December 9, 2014

மாநில அளவிலானா கால்பந்து போட்டி 2014 : எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி அரையிறுதியில் தோல்வி!


ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் வட்டார, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படுவது வழக்கம்.

இவ்வருடம் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி, காயல்பட்டினம் - சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணியையும், ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் நாசரேத் - மர்காஸிஸ் மேல்நிலைப் பள்ளி அணியையும் வென்றது. மண்டல அளவில் நடைபெற்ற போட்டியில் டோனாவூர் - சந்தோஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி அணியை வென்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றது.

மாநில அளவிலான போட்டிகள் தேனி மாவட்டத்தில் நேற்று (07/12) துவங்கியது இதில் முதல் போட்டியில் டீ-பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி - ராமனாதபுரம் அணியுடன் விளையாடிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக சுலைமான் மற்றும் ஃபயாஸ் தலா ஒரு கோல் அடித்தனர்.

இவ்வெற்றியை அடுத்து, இன்று (08/12) காலை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கம்பைன் மேல்நிலைப் பள்ளி - திருச்சி அணியுடன் விளையாடியது. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி வெற்றிபெற்றது. அந்த அணிக்காக சுலைமான், ஃபயாஸ் மற்றும் அஹமது ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இவ்வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியினர் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் மதுரை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியுடன் விளையாடியது.

இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளது.

Thanks : www.kayaltimes.com

Saturday, December 6, 2014

எம்பள்ளி மாணவர் மாநில அளவிலான கால்பந்து அணிக்குத் தேர்வு!

 
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் 09ஆம் வகுப்பு பயிலும் - காயிதேமில்லத் தெருவைச் சேர்ந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரது மகன் காதர் தாஹா.

இவர் விருதுநகரில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் கால்பந்து அணிக்காக சிறப்புற விளையாடியதையடுத்து மாநில அளவிலான அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது விருதுநகரில் நடைபெறும் 10 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று வரும் இவர் முகாம் நிறைவடைந்ததும் அங்கிருந்து கல்கத்தா சென்று தமிழ்நாடு மாநில அணிக்காக விளையாடவுள்ளார்.