Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Wednesday, August 26, 2015

இலக்கிய மன்றத் துவக்க விழா 2015

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் இலக்கிய மன்றத் துவக்க விழா, 22.08.2015 சனிக்கிழமையன்று நடைபெற்றது.



பள்ளியின் உதவி தலைமையாசிரியர் கே.எம்.ஏ.செய்யித் முஹ்யித்தீன் மற்றும் மூத்த ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். மாணவர் பீ.எம்.முஹம்மத் ஹஸன் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.



தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, தமிழாசிரியர் எம்.செய்யித் ரஃபீக் வரவேற்புரையாற்றினார். விழாவிற்குத் தலைமை தாங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் வாழ்த்துரையாற்றினார். வரலாறு பாட ஆசிரியர் பீ.ஆனந்தக்கூத்தன் சிறப்புரையாற்றினார். தமிழாசிரியர் இ.சின்னத்துரை நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. நிகழ்ச்சிகள் அனைத்தையும், தமிழாசிரியர் மு.முஹம்மத் இஸ்மாஈல் நெறிப்படுத்தினார்.



விழாவின்போது மாணவர்களின் பல்சுவை கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.





நன்றி : காயல்பட்டணம்.காம்

மண்டல அளவில் விளையாட சீனியர், சூப்பர் சீனியர் அணிகள் தகுதி!

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டிகளில் வென்றதன் மூலம், மண்டல அளவில் விளையாடுவதற்கு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவு, 19 வயதுக்குட்பட்ட சூப்பர் சீனியர் பிரிவு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-

பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் வட்டார - மாவட்ட - மண்டல – மாநில அளவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் வட்டார அளவிலான போட்டிகள், 21.07.2015 அன்று திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில் பங்கேற்ற மாணவர்கள் இப்போட்டிகளில் வென்றதையடுத்து, நடப்பு ஆகஸ்ட் மாதம் 19, 20 நாட்களில் - தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்றனர்.

19.08.2015 அன்று காலையில் நடைபெற்ற - 17 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவிற்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளியும், நாசரேத் மர்காஷிஸ் பள்ளியும் மோதின. அதில், 3-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. இந்த 3 கோல்களையும் அமீன் என்ற வீரர் அடித்து, ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.

அன்று மாலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், தூத்துக்குடி லசால் பள்ளியை எதிர்த்தாடி, 2-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சீனியர் அணி வெற்றிபெற்று, மண்டல அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இந்த இரண்டு கோல்களையும் தாவூத் என்ற வீரர் அடித்துள்ளார்.


20.08.2015 அன்று காலையில், அதே மைதானத்தில் நடைபெற்ற - 19 வயதுக்குட்பட்ட சூப்பர் சீனியர் பிரிவிற்கான கால்பந்துப் அரையிறுதிப் போட்டியில், தூத்துக்குடி ஸ்பிக் மேனிலைப்பள்ளியை எதிர்த்தாடிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. ஃபஹீம் ஒரு கோலும், மிஸ்ஹால் அடுத்த இரண்டு கோல்களையும் அடித்தனர்.

அன்று மாலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், மூக்குப்பீறி புனித மார்க்ஸ் மேனிலைப்பள்ளியை எதிர்த்தாடி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மண்டல அளவிலான போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது. இந்த இரண்டு கோல்களையும், மிஸ்ஹால் அடித்துள்ளார்.